சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது முருங்கேலி மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது சரிஸ்டல் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று காலை வழக்கம்போல அந்த பகுதி மக்கள் தங்களது பணியைத் தொடங்கியுள்ளனர். அப்போது, அந்த கிராமத்தில் அமைந்துள்ள சாலையின் ஓரத்தில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.


அப்போது, அந்த குரல் அங்கே இருந்த வைக்கோல் புதரில் இருந்து வருவதை கண்டுள்ளனர். உடனே வைக்கோல் புதர் அருகே சென்று பார்த்தபோது அங்கே ஒரு பச்சிளங்குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் அழுதுகொண்டு இருந்தது. வைக்கோல் புதருக்குள் பச்சிளங்குழந்தை அழுத நிலையில் இருப்பதை கண்ட மக்களுக்கு, அவர்கள் கண்ட இன்னொரு காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.




பிறந்து தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் கைவிடப்பட்ட இந்த பச்சிளம் பெண் குழந்தையை, அதே வைக்கோல் புதரை சுற்றியிருந்த நாய்க்குட்டிகளும், அதன் தாய் நாயும் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளது. இந்த குழந்தையை அந்த நாயும், அதன் குட்டிகளும் இரவு முழுவதும் பாதுகாத்து வந்துள்ளன. மக்கள் பார்க்கும்போது அந்த பச்சிளங்குழந்தையை சுற்றி நாய்க்குட்டிகள் சுற்றி பாதுகாப்பாக படுத்திருந்தன.


பின்னர், அந்த பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர், அந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். இரவு முழுவதும் கடும் குளிரானால் அவதிப்பட்டு வந்த அந்த பச்சிளங்குழந்தையை நாய்க்குட்டிகளும், நாயும் பாதுகாத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநிலத்தில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி திபான்சா கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த டுவிட்டர் இப்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




மனிதர்கள் காட்டும் அன்பையும், நன்றியையும் விட மனிதர்கள் மீது விலங்குகள் காட்டும் அன்பும், நன்றியும் அளப்பரியது என்பதற்கான பல்வேறு நிகழ்வுகளில் இந்த நிகழ்வு சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது.


மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!


parliament Winter session : அவையின் கேள்வி நேரத்தை அலட்சியப்படுத்திய 9 பாஜக உறுப்பினர்கள் - வலுக்கும் கண்டனங்கள்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண