ரயில் பயணங்களின் போது எப்போதும் சில அவசர கால நேரங்களில் ரயிலை நிறுத்த ஏதுவாக ஒரு அவரசகால மணி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த மணியை பயணிகள் இழுத்தால் ரயில் நின்றுவிடும். அப்படி அவர்கள் இழுக்கும் மணியை மீண்டும் சரி செய்வது சற்று கடினமான ஒன்று தான். அதன்காரணமாகவே அனைத்து ரயில்களிலும் இந்த மணியை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு இருக்கும். 


 


இந்நிலையில் ஒருவர் ரயிலில் இருந்த அவசரகால மணியை தேவையில்லாமல் இழுத்து ரயிலை நிறுத்திய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த ரயில் ஒரு பாலத்தின் மீது நின்றுள்ளது. அப்போது ரயில் ஓட்டுநர் பாலத்தின் நடுவே இறங்கி அந்த மணியை சரி செய்த வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. 


 






இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் தேவையில்லாமல் ரயிலிலுள்ள அவசரகால மணியை பயன்படுத்தினால் இதுபோன்ற பிரச்னைகள் வரும் என்பதை உணர்த்தியுள்ளது. அந்த ரயில் ஓட்டுநரின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 


அந்தப் பதிவில் சதீஷ் குமார் என்ற ஓட்டுநர் கோதன் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் இந்த அவசரகால மணியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையில் ஓடி வரும் உள்ளூர் ரயில்களில் இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண