Twins Dead : வெவ்வேறு மாநிலத்தில் இருக்கும் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இரட்டையர்கள்


ராஜஸ்தான் பார்மரை சேர்ந்த இரட்டையர்கள் சுமர் சிங் மற்றும் சோஹன் சிங் ஆவார். இவர்கள்  வெவ்வேறு மாநிலத்தில் 900 கி.மீ தொலைவில் இருவரும் வசித்து வருகின்றனர்.  இதில் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்வதாகவும் மற்றொருவர்  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு படித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. 26 வயதுடைய இவர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில்,  குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வசிப்பவர் சுமர் சிங். இவர் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.


அடுத்தடுத்து உயிரிழப்பு:


இவர் இறந்த சுமார் ஒரு மணி நேரத்திலேயே,  ஜெய்ப்பூரில் வசிக்கும் அவரது சகோதரர் சோஹன் சிங் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, இவர்கள் உயிரிழந்தது பற்றி பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர்களது சொந்த கிராமமான ராஜஸ்தான் மாநிலம் சார்னோ தலா என்ற கிராமத்தில் அவர்கள் உடல் தகனம் செய்யப்பட்டது.  900 கிலோ மீட்டர் தொலைவில் வாழ்ந்த வந்த இரட்டை சகோதரர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”ஒரு மணி நேர இடைவெளியில் இரட்டையர்கள் உயிரிழந்துள்ளனனர். ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்தும், மற்றொருவர் வீட்டின் மாடியில் இருந்து விழுந்தும் உயிரிழந்துள்ளனர். உடனே இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டையர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மற்றொரு சம்பவம்


முன்னதாக, லக்னோவின் மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2  பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட்பேல். இவரது மனைவி சோஜா. இருவருமே ஆசிரியர்கள். மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஜோஃப்ரெட் வர்கீஸ், கிரிகோரி, ரால்பிரட் வர்கீஸ் கிரிகோரி என்ற இரட்டை மகள்கள் உள்ளனர். 


இந்நிலையில் ஒரு நாள், இரட்டை மகன்களில் ஒருவரான ஜோஃப்ரெட் வர்கீஸ் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மற்றொரு மகன் ரால்பிரட் வர்கீஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஒரு மகன் உயிரிழந்த அடுத்த ஒரு மணி நேரத்திலேயே மற்றொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




மேலும் படிக்க


Women's Hockey: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஆண்டை வெற்றியுடன் தொடங்குவோம் - மகளிர் ஹாக்கி கேப்டன் சவிதா நம்பிக்கை..!