Women's Hockey: இந்திய மகளிர் ஹாக்கி அணி , ஜனவரி 16-ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஏழு போட்டிகள் கொண்ட தொடருக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் தொடர் என்பதால் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கும் என அணியின் கேப்டன் சவிதா நம்பிக்கை தெரிவித்துள்ள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகள் முடிந்த பின்னரும், ஜனவரி 23 முதல், உலகின் நம்பர்.1 நெதர்லாந்துக்கு எதிராக, மூன்று போட்டிகளில், விளையாடி எங்களுக்காக நல்ல அளவிலான எக்ஸ்போஷர் போட்டிகளைத் திட்டமிட்டதற்காக இந்திய ஹாக்கி நிர்வாகத்துக்கு நாங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். குறிப்பாக ஒரு அணியாக நாங்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்ளௌக்காக சிறப்பாகத் தயாராகி வருவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். கேம்ஸ் மற்றும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு நேரடியாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது" என்றும் இந்திய கேப்டன் சவிதா கூறினார். குறிப்பாக இந்த தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம், இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு நாங்கள்ன் தயாராவதற்கும் அணியின் ஒட்டு மொத்த பலமும் அடையாளம் காணப்பட்டு செயல்பட உதவுவதோடு அணியை இன்னும் பலமாக்கிட உதவும் என சவிதா கருதுகிறார்.
மேலும், சவிதா கூறுகையில், "தென் ஆப்பிரிக்கா மற்றும் உலகின் நம்பர் 1 அணியான நெதர்லாந்துக்கு எதிரான இந்தப் போட்டிகள் எங்கள் ஆட்டத்தின் தரத்தை உயர்த்த உதவுவதோடு, அதே சமயம் நம்மிடம் இல்லாத ஆட்ட யுத்திகளை கண்டறியவும் உதவும். இந்த சுற்றுப்பயணத்திற்கு நாங்கள் பெங்களூரில் ஒரு வார காலம் நன்கு தீவிர பயிற்சியில் ஒரு அணியாக சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு தயாராக இருக்கிறோம். "2022 ஆம் ஆண்டு இந்திய மகளிர் ஹாக்கியின்
ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது. அதன் நீட்சியாக இருக்கக் கூடிய இந்த ஆண்டிலும் நாங்கள் ஒவ்வொரு வீராங்கனைகளாகவும் அணியாகவும் மனதளவில் அதிக நம்பிக்கையுடன் இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆண்டை ஒரு நல்ல வெற்றியுடன் தொடங்க நாங்கள் தென் ஆப்ரிக்க சுற்று பயணத்தினை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்," என்று அணியை பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கு அழைத்துச் சென்று வரலாற்றில் இடம் பெற்ற ஹாக்கி வீராங்கனை சவிதா கூறினார். .