வரும் ஜூன் மாதத்தில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வங்கிகளில் மிகக் குறைந்த விடுமுறை நாள்களே வழங்கப்படவுள்ளன. அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகிய இரு வகை வங்கிகளிலும் வரும் ஜூன் மாதத்தில் 8 விடுமுறை நாள்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. ரிசர்வ் வங்கியின் மாற்று முறையாவணங்கள் சட்டத்தின் கீழ், வார இறுதி நாள்கள், பண்டிகை நாள்கள் ஆகியவை விடுமுறைகளாக அறிவிக்கப்படுகின்றன. வார இறுதி நாள்களின் விடுமுறைகளைத் தவிர, பிற விடுமுறை நாள்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெவ்வேறு விதமாக விடுமுறைகளாக அளிக்கப்படுகின்றன. வார இறுதிகளைப் பொருத்த வரையில், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகளின் அடிப்படையில் 6 விடுமுறை நாள்கள் வழங்கப்படுகின்றன. 


வரும் மாதத்தின் வங்கி விடுமுறைகளின் பட்டியலை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளதோடு, இதன்மூலமாக ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வங்கியைப் பயன்படுத்துவோருக்கு அதுகுறித்து முன்கூட்டியே தெரிய வரும். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி விடுமுறை நாள்களின் போது, அரசுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் அனைத்து கிளைகளும் மூடப்படும். 



ரிசர்வ் வங்கியின் விடுமுறைகள் மூன்று வகைகளாக கொடுக்கப்படுகின்றன. மாற்று முறையாவணங்கள் சட்ட விடுமுறைகள், ரியல் டைம் க்ரோஸ் செட்டில்மெண்ட் விடுமுறைகள், வங்கிக் கணக்கை மூடும் விடுமுறை நாள்கள் ஆகிய மூன்று வகைகளின்படி, விடுமுறைகள் வழங்கப்படுகின்றன். இந்த நாள்களின் போது, அனைத்து வங்கிகளும் மூடப்படுகின்றன. ஏப்ரல் 1 அன்று நாடு முழுவதும் வங்கிக் கணக்கை மூடும் விடுமுறை நாளாகப் பின்பற்றப்பட்டு, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை வழங்கப்படுகிறது. மாற்று முறையாவணங்கள் சட்டத்தின் கீழ் அதிக நாள்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. 


எனினும், ஜூன் மாதத்தின் போது, மாற்று முறையாவணங்கள் சட்ட விடுமுறைகளின் கீழ் இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகின்றன. ஜூன் 2 அன்று மகாராணா பிரதாப் ஜெயந்தி எனவும், ஜூன் 11 அன்று குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்த நாள், ராஜா சங்கராந்தி முதலான விழாக்களுக்காக விடுமுறை வழங்கப்பட்டாலும், இந்த நாள்களின் போது நாட்டின் அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்காது. உதாரணமாக, மேகாலாயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் ஜூன் 2 அன்று மகாராணா பிரதாப் ஜெயந்தி விழாவுக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். எனினும் நாட்டின் பிற வங்கிகள் மூடப்படாது. இதன்மூலம், வங்கி விடுமுறைகள் பகுதிகளின் பண்டிகைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. 



ஜூன் 2022ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாள்களின் முழுப் பட்டியல்:


மாற்று முறையாவணங்கள் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் விடுமுறைகள்:


ஜூன் 2 : மகாராணா பிரதாப் ஜெயந்தி - ஷில்லாங்
ஜூன் 15: Y.M.A Day/ குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்த நாள் / ராஜா சங்கராந்தி - ஐஸாவ்ல், புபவேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்


இந்த விடுமுறைகள் மட்டுமின்றி, 6 வார இறுதி நாள்களின் போதும் விடுமுறைகள் வழங்கப்படுகின்றன.. அந்தப் பட்டியல்:


ஜூன் 5: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 11: இரண்டாவது சனிக்கிழமை
ஜூன் 12: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 19: ஞாயிற்றுக்கிழமை
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிற்றுக்கிழமை


இந்த விடுமுறைகளைக் கணக்கில் கொண்டு, உங்கள் வங்கிப் பணிகளைத் திட்டமிடுவது நல்லது.