உதர உதர சாராய பாக்கெட்டுகள் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு பேருந்தில் இடுப்பில் சாராயம் கடத்தி வந்த நபரின் வீடியோ வைரலானது.
கடலூர் மாவட்ட தலைநகரான கடலூரும் பாண்டிச்சேரி மாநிலமும் சிர்தளவு தொலைவில் உள்ள காரணத்தினால் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மாவட்ட வழியாக தொடர்ந்து மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் நடைபெற்று வருகிறது, இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன் உத்தரவுபடி கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடலூர்- பாண்டிச்சேரி எல்லையோர பகுதிகளான சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து மதுவிலக்கு காவல் துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு உள்ள சூழலில் பாண்டிச்சேரியில் இருந்து கள்ளச் சாராய பாக்கெட்டுகளை அதிக அளவில் கடத்தி வந்து, கடலூர் தமிழகப் பகுதிகளில் விற்பனை செய்வது என்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று பாண்டிச்சேரியிலிருந்து சேடப்பாளையம் கிராமத்தை சேர்நத மாயவன் என்பவர் பாண்டிச்சேரிக்கு சென்று மது அருந்திவிட்டு கடலூர் மத்திய பேருந்து நிலையத்திறக்கு வந்துள்ளார் அப்போது குடி போதையில் நிலை தடுமாறி நின்றுகொண்டு இருந்தார், இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை விசாரித்தனர்.
அப்போது மாயவன் மேல் சட்டை உள்ளே மற்றும் இடுப்பில் அதிக அளவில் சாராய பாக்கெட்டுகளை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறையினர் அதனை கீழேபோடும் படி கூறி உள்ளனர். இடுப்பில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தவுடன் மளமளவென சாராய பாக்கெட்டுகள் அதிகளவு தரையில் விழுந்தன இதனை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைத்தனர். மேலும் சாராய பாக்கெடுக்களை அங்கேயே அழித்த காவல் துறையினர் அதனை கடத்தி கொண்டு வந்த மாயவனை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் சாராய பாக்கெட் எடுத்து வந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை தொடர்நது காவல் துறையினர் சாராய பாக்கெடினை கடத்தி வந்த மாயாவனை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திறக்கு அழைத்து சென்று தற்பொழுது கைது செய்து உள்ளனர்.
தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் மதுவின் விலை குறைவாக கிடைக்கும் காரணத்தினால் பாண்டியில் இருந்து மது கடத்தி வருவது அவ்வப்பொழுது நடந்து வருகிறது, ஆனால் கடந்த சில நாட்களாக இவ்வாறு சாராயம் கடத்தி வருவதும் வாடிக்கையாக தொடங்கி உள்ளது இதனை தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.