ஒடிஷா மாநிலத்தில் மூன்று ரயில்கள் தடம் புரண்டு நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.


ஒடிஷா - கோர ரயில் விபத்து:


ஒடிஷா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்ப்யா நடந்த கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290-ஐ கடந்துள்ளது.


கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதற்கு சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.


, ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது. 


விபத்து நிகழ்ந்தது முதலே விபத்து தொடர்பாக பல யூகங்கள் வலம் வந்த நிலையில், விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது ஒடிஷா ரயில் விபத்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் பரிந்துரை செய்துள்ளது.






வீரேந்திர சேவாக் சர்வதேச பள்ளி:


நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து குறித்து பலரும் தங்கள் வேதனை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், ரயில் விபத்தில் உயிரிந்தவர்களின் குழந்தைகளுக்கு அவர் நடத்தி வரும் பள்ளியில் தங்கும் வசதியுடன் இலவச கல்வி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக சேவாக் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்.” இந்த கோர விபத்து நீண்ட நாட்களுக்கு நம்மை வெகு நாட்களுக்கு நிச்சயம் துயரில் ஆழ்த்தும். இந்த நேரத்தி என்னா முடிந்தளவிலான சிறு உதவியை செய்ய விரும்புகிறேன். சேவாக் இன்டர்நேசனல் பள்ளியில் அவர்களுக்கு இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.