ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று (வெள்ளிக்கிழமை) பேட்மிண்டன் விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பேட்மிண்டன் விளையாடிய லாலு


இன்ஸ்டாகிராமில் ஆர்ஜேடி தலைவரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோவில், 75 வயதான லாலு விளையாட்டை ரசித்து ஆடுவது பலரை ஈர்த்தது. வெளியிட்ட அந்த பதிவிற்கு மேல், தேஜஸ்வி ஹிந்தியில், "பயப்படக் கற்றுக் கொள்ளவில்லை, கும்பிடக் கற்றுக் கொள்ளவில்லை ... போராடினேன், போராடுவேன், சிறைக்கும் பயப்பட மாட்டேன், இறுதியில் வெற்றி பெறுவேன்." என்று எழுதினார். இன்ஸ்டாகிராமில் இந்த பதிவு பல லைக்குகளையும் கமென்ட்டுகளையும் பெற்றுள்ளது. பலர் லாலுவின் உற்சாகத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.






சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை


லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின்னும் முன்னும் அவர் பல உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன் ட்விட்டரில் அவரது மகள் ரோஹிணி ஆச்சார்யா, அவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவர்தான் அவருக்கு கிட்னி தானமாக கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, யாதவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், லாலுவை ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் சிறிய வீடியோ கிளிப்பைப் பகிர்ந்திருந்தார்.


தொடர்புடைய செய்திகள்: Rajinikanth: ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசியா...சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே வம்பிழுத்த ப்ளூ சட்டை... முற்றுகையிட்ட ரசிகர்கள்!


தேஜஸ்வி செய்த டுவீட்


சிகிச்சையின்போது அவரது டுவீட்டில், "சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு, அப்பா ஆபரேஷன் தியேட்டரில் இருந்து ஐசியுவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எங்கள் தேசியத் தலைவர் மற்றும் கிட்னியை கொடுத்த எனது மூத்த சகோதரி ரோகினி ஆச்சார்யா இருவரும் நலமாக உள்ளனர்." என்று எழுதினார்.






எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு


ரோஹின் ஆச்சார்யாவின் செயல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “ரோகினி ஆச்சார்யா ஜெய்சி போல ஒரு மகள் எல்லோருக்கும் இருக்க வேண்டும். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்... வரும் தலைமுறைகளுக்கு நீங்கள் முன்னுதாரணமாக இருப்பீர்கள்," என்று கூறினார். இதற்கிடையில், சமீபத்தில் பாட்னா மற்றும் பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் லாலுவும் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு முன்னதாக பேசிய லாலு பிரசாத் யாதவ், "2024 பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்டிஏ) அகற்ற முன்மொழியப்பட்ட எதிரணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்" என்று கூறினார்.