லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை இந்திய விமானப்படையின் விமானங்கள் மூலம் மேற்கு பகுதியின் ராணுவ தலைமையிடத்திற்கு எடுத்து செல்லும் பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. 26 ராணுவ வீரர்களுடன் சென்று கொண்டிருந்த இந்த வாகனம் லடாகின் துர்துக் பகுதியில் சென்று போது நீரில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்திற்கான காரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சுமார் 19 ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த வாகனம் 50-60 அடி ஆழத்தில் இந்த விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான முழு விவகாரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்