தமிழ்நாடு முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கோயில்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூட அனுமதிக்க அளிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் நேற்று பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 


இந்நிலையில் நேற்று லடாக் பகுதியில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் கொட்டும் பனியிலும் பொங்கல் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் கொட்டும் பனியிலும் ராணுவர் வீரர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து பொங்கல் கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 






முன்னதாக ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






“இராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், தொழில்முறைக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 


பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையில் காண : பாலமேடு ஜல்லிக்கட்டு யூடியூப் லைவ்


மேலும் படிக்க: சினிமா பாணியில் சேஸிங் செய்த காவலருக்கு பரிசு வழங்கிய ஆணையர்- வைரல் வீடியோ !