சமூகவலைதளங்களில் எப்போதும் சினிமாவில் வரும் சூப்பர் ஹீரோக்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்தவகையில் தற்போது ஸ்பைடர்மேன் தொடர்பான வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஸ்பைடர்மேன் வேடம் அணிந்து ஒருவர் நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


 


இந்த வீடியோவை கொல்கத்தா பக்கம் ஒன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் கொல்கத்தாவிலுள்ள சந்தாலி இன பெண்கள் தங்கள் பாரம்பரிய இசைக்கு நடனமாடும் காட்சிகள் உள்ளன. அவர்களுடன் சேர்ந்து ஸ்பைடர்மேன் வேடம் அணிந்து ஒருவர் நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பலரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






இந்த வீடியோ கொல்கத்தாவின் சாந்திநிகேதன் பகுதிக்கு அருகே உள்ள சோனஜ்ஹூரி என்ற இடத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை தற்போது வரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் பலரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 


 


இந்த வீடியோ எங்களுடைய நாளை இனிமையான நாளாக மாற்றியது என்று சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒருவர் ஸ்பைடர்மேன் செருப்பு உடன் நடனமாடுவது மிகவும் வேடிக்கையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண