இந்து கோயில்கள் எவ்வளவுக்கு எவ்வளவு வழிபாடுதலுக்கு சிறப்போ அவ்வளவுக்கு அவ்வளவு பிரசாதம் வழங்குவதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமீர்தம், ஐயப்பன் கோயில் அரவணை பிரசாதம், பெருமாள் கோயிலில் தரப்படும் புளியோதரை எனப் பல கோயில்களில் பிரசாதங்களின் சிறப்பை அடிக்கி கொண்டே போகலாம். அப்படி இருக்கும் போது ஒரு கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக நூடுல்ஸ் தரப்படுகிறது. அந்த கோயில் இந்தியாவில் உள்ளது. அது எங்கே இருக்கிறது தெரியுமா?


மேற்கு வங்க மாநிலத்தின் டங்க்ரா பகுதியில் பல ஆண்டு காலமாக திபேதியர்கள் வம்சாவளியை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் சீன மக்களின் வாழ்க்கை முறையை சார்ந்த இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய உணவு மற்றும் கலாச்சாரம் ஆகிய அனைத்தும் சீன மக்களை சார்ந்ததாகவே இருக்கும். அவர்களில் பெரும்பாலானவர்கள் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள். மற்ற பாதி நபர்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். எனினும் இவர்களுக்கு இந்து முறை வழிபாடு எப்போதும் பிடித்த ஒன்றாக அமைந்திருந்தது. 




டங்க்ரா பகுதியில் சுமார் 60ஆண்டுகளுக்கு முன்பாக  சீன திபேதியர்கள் வம்சாவளியை சேர்ந்த தம்பதி ஒருவரின் மகனிற்கு பெரியளவில் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்களிடம் சென்று தன்னுடைய மகனை பரிசோதனை செய்துள்ளனர். அதற்கு மருத்துவர்கள் அனைவரும் சிகிச்சை இவருக்கு பலன் அளிக்காது என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து செய்வது அறியாத அந்த தம்பதி தன்னுடைய மகனை ஒரு மரத்தடியில் வைத்து இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துள்ளனர். அதில் அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றும் அடைந்துள்ளது. அதன்பின்னர் தொடர்ந்து விடாமல் பிரார்த்தனை செய்துள்ளனர். அப்போது அவர்களுடைய மகனிற்கு நல்ல முறையில் உடல் குணம் அடைந்துள்ளது. 






இந்தச் செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள் அந்த இடத்தை ஒரு புனிதமான இடமாக கருதி வேண்டி வழிபட்டு வந்தனர். அங்கு அவர்கள் வேண்டும் நிகழ்ச்சிகள் நடக்க தொடங்கியுடன் அதை ஒரு கோயிலாக மாற்றினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த செலவில் ஒரு கோயில் கட்டடம் கேட்டியுள்ளனர். அந்த கோயிலுக்கு சீன காளி ஆலையம் என்ற பெயரை வைத்துள்ளனர். இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு சீன உணவுகளில் ஒன்றான நூடுல்ஸ் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இந்தப் பகுதியில் மேலும் சில சீன உணவுகள் பிரசாதமாக வங்கப்பட்டு வருகிறது. 




இந்தக் கோயிலில் தீபாவளி, காளி பூஜா உள்ளிட்ட அனைத்து விஷேசங்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்கு வரும் மக்கள் இந்த கோயிலில் வழிபட்டு விட்டு அருகே உள்ள சீன உணவகத்திலும் இருக்கும் சிறப்பான உணவையும் ருசித்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 


மேலும் படிக்க: 25 ஏர்போர்ட்... 400 ரயில்வே ஸ்டேஷன்...என்னவெல்லாம் விற்கிறார் நிதியமைச்சர் நிர்மலா?