Kolkata fire break incident: கொல்கத்தாவில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா மாநிலம் குட்காட் பகுதியில் உள்ள எஸ்கே திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 15வாகனங்கள் சம்பவம் இடத்திற்கு வந்துள்ளனர். தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைப் படை சம்பவ இடத்திற்கு சென்றது. விபத்து தொடர்பாக இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ரூபி எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் தீ பிடித்தது. இந்த தீ மளமளவென பக்கத்து கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் ஷோரூமுக்கு மேலே இருந்த ஓட்டல், விடுதி ஆகியவற்றில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் தீயில் சிக்கிக்கொண்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஷோ ரூம் தரை தளத்தில் செயல்பட்டு வந்தது. சார்ஜ் போடப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீடீரென தீ பிடித்தது. தீ அடுத்தடுத்து அங்கு இருக்கும் கட்டடங்களுக்கு பரவியது. இந்த தீ விபத்தில் 24 பேர் சிக்கி கொண்டனர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அழைத்து செல்லும்போது உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியா மட்டுமின்றி பல்வேறு இடங்களில் அதிகளவு நடைபெற்றது. இதில் பலர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தற்போது நடைபெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கொல்கத்தாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்ன காரணம் என்பது குறித்து சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.