விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவல் அளித்த மர்ம நபரை கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.


விமான நிலையத்தில் சுற்றி திரிந்த மர்ம நபர்:


கடந்த 12 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 275க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெரும்பாலான மிரட்டல்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே விடுக்கப்பட்டன.  குறிப்பாக, எக்ஸ் தளத்தின் மூலம் விமானங்களுக்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டன.


இந்த நிலையில், விமானத்தில் குண்டு இருப்பதாக மர்ம நபர் ஒருவர் பொய்யான தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, கொல்கத்தா விமான நிலையத்தில் அவரை பாதுகாப்பு அதிகாரிகள் வளைத்து பிடித்தனர். பின்னர், விமான நிலையத்தின் போர்டிங் பகுதியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்து வருகின்றனர். 


 






தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்:


வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்புபவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்தார்.


கடந்த மாதம், டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம், தம்மம் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்காவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் (SG116), பாக்டோக்ரா பெங்களூரு (QP 1373) அலையன்ஸ் ஏர் விமானம், அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் (9I 650), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 684), மதுரை - சிங்கப்பூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


இதையும் படிக்க: Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!