கேரள மாநிலம் கொச்சியில் காவல்துறை அலுவலர் ஒருவர், காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக சாலையை முடக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.




இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பலருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அந்த காவல்துறை அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?


குயின்ஸ் வாக்வேவுக்கு அருகே உள்ள சாலையில்தான், மேற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆய்வாளர் வினோத் பிள்ளை, காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். இதற்காகவே அந்த சாலை முடக்கப்பட்டுள்ளது என மக்கள் புகார் கூறுகின்றனர்.


பொதுவாக, காலை நடைபயிற்சிக்காக குயின்ஸ் வாக்வேதான் முடக்கப்படும், ஆனால், கடந்த மூன்று நாள்களாக அதற்கு அருகில் உள்ள சாலை முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளது என மக்கள் புகார் கூறியுள்ளனர்.


காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக வாக்வேதான் முடக்கப்படும் என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், கடந்த மூன்று நாள்களாக, அதற்கு அருகில் உள்ள சாலை முடக்கப்பட்டதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அங்குதான், ஏசிபி வினோத் பிள்ளை காலை நடைபயிற்சி மேற்கொள்கிறார்.


இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்


தினமும் காலை 5 மணி முதல் 7.30 மணி வரை சாலை சுற்றி வளைக்கப்படுவதால், சாலையின் மறுபுறத்தில் இருந்து குழந்தைகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், அங்கு போக்குவரத்து மாற்றப்படுவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.


இந்த நிலையில், சாலையின் புகைப்படத்தை சமூக வலைதள பயனாளி ஒருவர் வியாழக்கிழமை அன்று பகிர்ந்துள்ளார். அதில், சாலையின் நடுவே சிவப்பு நிற தடை வேலி ஒன்று போடப்பட்டுள்ளது. 


மற்றொரு வீடியோவில், கார், பள்ளி பேருந்து, குழந்தைகள் ஆகியோர் அதே சாலையின் மற்றொரு பக்கத்திலிருந்து ஏறி செல்வதை காணலாம். இதுகுறித்து குடியிருப்புவாசியான எலிசபெத் ஜார்ஜ் கூறுகையில், "காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக சாலை முடக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண