வித்தியாசமான நடைமுறை:


இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் வித்தியாசமான முறையில், திருமண போட்டோ ஷூட்டை நடத்துகின்றனர். இதையடுத்து இளைஞர்களின் வித்தியாசமான  திருமண போட்டோ ஷூட்டிற்கு ஆதரவளிக்கும் விதமாகவும் வருவாயை பெருக்கும் விதமாகவும் மெட்ரோ ரயிலை வாடகைக்கு விட கொச்சி மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது


வருமானம் :




மெட்ரோ ரயிலை வாடகை விடுவதன் மூலம், மெட்ரோ நிர்வாகத்தின் வருவாயை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பகலில் பொதுமக்களுக்கு இயங்கும் எனவும், இரவு நேரங்களில் போட்டோ ஷூட்டுக்கு வாடகைக்கு விடப்படும் எனவும் கொச்சி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Also Read:திரைப்படங்களும், லாக் அப் ஷோவும் காசை அள்ளி கொடுத்திருக்கின்றன. அதனால் தாக்கத் திரைப்பட ப்ரிவ்யூ ஷோவிற்கு தனது புதிய காஸ்ட்லி காரில் வந்து இறங்கினாராம்.


போட்டோ ஷூட்டுக்கு எவ்வளவு:


போட்டோ ஷூட்டானது இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒன்று மெட்ரோ நிலையங்களில் நின்று கொண்டிருக்கும் ரயில்களில் எடுத்துக் கொள்ளும் முறை. மற்றொன்று ஓடும் ரயில்களில் போட்டோ சூட் எடுத்துக் கொள்ளும் முறை. நின்று கொண்டிருக்கும் ரயில்களில் போட்டோ சூட்டுக்கு ஒரு கோச்சுக்கு ரூ.5,000 வசூலிக்கப்படும். மூன்று கோச்சுகளுக்கு ரூ.12,000 வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அடுத்ததாக ஓடும் ரயில்களில்  ஒரு கோச்சுக்கு ரூ.8000-ம்; மூன்று கோச்சுகளுக்கு ரூ.17,500 வசூலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. போட்டோ ஷூட்டானது இரண்டு மணி நேரத்திற்குள் எடுத்து முடிக்கப்பட்ட வேண்டும்.


டெபாசிட் தொகை:


மெட்ரோ ரயிலில் போட்டோ சூட்டுக்கு முன்பதிவு செய்யும் போது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். ஒரு கோச்சுக்கு ரூ.10,000மும், மூன்று கோச்சுகளுக்கு ரு.25,000மும் வசூலிக்கப்படுகிறது. இந்த டெபாசிட் தொகையானது போட்டோ ஷூட் முடிந்த பின் திருப்பி வழங்கப்படும்.


இளைஞர்களிடையே வரவேற்பு:


ரயில்களில் திரைப்படம் எடுப்பதை பார்த்திருப்போம், ரயில்களில் திரைப்படம் போன்று திருமண போட்டோ ஷூட்டை எடுக்க முடியுமா என்று பலரும் கனவு கண்டிருப்பர்.இளைஞர்களின் கனவை நனாவாக்கும் விதமாக கொச்சி மெட்ரோவின் முடிவு, பல புதுமண தம்பதியினரை ,மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Also Read: தோனி ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான எழுந்த கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் தற்போது வைரலாகி வருகிறது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண