கேரள மாநிலமானது அடர்ந்த வனங்களை கொண்ட மாநிலம் ஆகும். இந்த மாநிலத்தின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது வயநாடு. கேரளாவின் மிகவும் முக்கியமான சுற்றுலா பகுதியான இங்கு தோள்பட்டி.

வாகனங்களைத் துரத்திய குட்டியானை:


இங்குள்ள நெடுஞ்சாலையில் சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென குட்டி யானை ஒன்று சாலையில் சென்ற வாகனங்களைத் துரத்தி ஓடியது. கேரளாவின் அரசுப்பேருந்து ஒன்றை அந்த குட்டி யானை முன்னும் பின்னும் சுற்றி வந்தது. பின்னர், அந்த பேருந்து புறப்பட்டுச் சென்றதும் அந்த குட்டியானை துரத்தி ஓடியது. பின்னர், ஒரு கார் வரவும் அந்த காரை துரத்தி பின்னாலேயே ஓடியது.  






தாயைப் பிரிந்து தவிப்பு:

மேலும், அந்த வழியே வந்த கார் மற்றும் பேருந்துகளையே சுற்றிச்சுற்றியே அந்த குட்டியானை உலா வந்தது. வனத்திற்குள் தனது தாயை பிரிந்த அந்த குட்டியானை வழிதவறி நெடுஞ்சாலைக்கு வந்துள்ளது. இதனால், சாலையில் தனது தாயைத் தேடி அந்த குட்டி யானை அங்குமிங்கும் ஓடி வந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்பவர்களை மனதை கரைய வைத்துள்ளது.


தாயைப் பிரிந்து தவித்து வரும் இந்த குட்டி யானை குறித்து கேரள வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குட்டி யானையை அதன் தாயுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.