Kerala trans couple : நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது.
பிறப்பால் பெண்ணாக இருந்த ஐஹாத் ஆணாக மாறினார். அதேபோன்று பிறப்பால் ஆணாக இருந்த ஜியா பாவல் பெண்ணாக மாறினார். கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த ஜியா பாவல், ஐஹாத் திருநங்கை தம்பதி, சிறுவயதிலேயே வீட்டில் இருந்து வெளியேறி, கடந்த மூன்று ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மற்றவர்களை போல ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தனர். இதனால் கோழிக்கோடு அரசு மருத்துவரிடன் அதற்கான ஆலோசனையும் பெற்றனர். பெண்ணாக இருந்து ஆணாக ஜஹாத் மாறியபோது, அவரது கருப்பை அகற்றப்படாததால், அவர் கருதரிப்பது சாத்தியும் என்று கூறினர்.
இந்நிலையில், பாவல் சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜஹாத் 8 மாத கர்ப்பாக உள்ளார். ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது. நாட்டிலேயே திருநங்கை ஒருவர் கர்ப்பமாக இருப்பது இதுவே முதல்முறை என பதிவிட்டிருந்தார்.
இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையின் பாலினத்தை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறியதாவது, "ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளனர். என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.
=
இதுகுறித்து ஜியா பாவல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, ”என்னுடைய வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள். என்னை காயப்படுத்தும் விதமாக பல பேச்சுக்கள் வந்தன. அதற்கு இது பதிலாக இருக்கும். எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவரும் நன்றி. தான் ஆணாக பிறந்து தன்னை பெண்ணை உணர்ந்ததாகவும் ஒரு குழந்தை தன்னை அம்மா என்று அழைக்கப்போவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக" தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, கேரள திருநர் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க