கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் சீனா. 25 ஆண்டுகளுக்கு முன், அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்தால், அவர் தனது வலது கை விரல்களை இழக்க நேரிட்டுள்ளது. இந்நிலையில், சிறு வயது முதலே சீனாவின் சிரமங்களை பார்த்து வளர்ந்த அவரது மகன் நிதின், செவிலியர் படிப்பு படித்து அதே திருச்சூர் மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக சேர்ந்திருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


1995-ம் ஆண்டு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சீனா. சிகிச்சையின்போது செவிலியர் ஒருவர் இவரை கவனித்து கொள்வதில் கவனக் குறைவாக இருந்துள்ளார். இதனால், சீனா தனது வலது கை விரல்களை இழந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து, செவிலியர் மீதும் மருத்துவமனை மீதும் வழக்கு தொடரப்பட்டதில் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், கை விரல்களுக்கான சிகிச்சை மேற்கொள்ள சீனாவின் குடும்பத்தினருக்கு போதுமான வருமானம் இருக்கவில்லை. இதனால், இரண்டு குழந்தைகளையும் சீனாவிடம் விட்டுவிட்டு அவரது கணவர் வெளிநாட்டுக்குச் சென்று பணியாற்றி வந்துள்ளார்.


மேலும் படிக்க: என்றென்றும் ஹீரோ..! புனித்ராஜ்குமாரின் ஊக்கம்.. கர்நாடகாவில் அதிகரிக்கும் கண்தானம்.!


இப்போது 25 ஆண்டுகளுக்கு பிறகு, குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி இருக்கின்றனர். இதில், சீனாவின் மகன் நிதின், பி.எஸ்இ நர்சிங் படிப்பை படித்திருப்பவர். சிறுவயது முதலே தனது தாயாரின் சிரமங்களை நேரில் பார்த்து வளர்ந்த அவர், செவிலியராக பணியாற்ற வேண்டும், கவனக்குறைவின்றி மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய வேண்டும் என உறுதி கொண்டவராக இருந்துள்ளார். அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. நர்சிங் படிப்பு முடித்துவிட்டு திருச்சூர் மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்திருக்கிறார் அவர். சீனாவுக்கு இன்னொரு மகள் இருக்கிறார். அவர் படித்து, திருமணமாகி அபு தாபியில் குடிபெயர்ந்துவிட்டார்.


ஒரு கையில் விரல்களின்றி அரும்பாடுபட்டு குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவந்திருக்கும் சீனா, அவரது மகன் செவிலியராக பணிபுரிவது குறித்து மிகுந்த பெருமிதம் கொள்கிறார்.


Watch Video: "தோனிக்குத்தான் ஃபர்ஸ்ட் கேக்..." - விராட்கோலி பர்த்டே ஸ்பெஷல் வீடியோ.!


 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண