பிரபல பாம்பு பிடி வீரர் வா வா சுரேஷ் பாம்பு கடித்து உயிருக்கு போராடி கொண்டுள்ளார். அவர் நலம் பெற  இறைவனை வேண்டுவோம் என்று சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.


கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் மீட்புப் பணியின் போது பாம்பு கடித்ததில் பிரபல பாம்புக் கையாளும் மீட்பருமான வாவா சுரேஷ் (47) திங்கள்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


குறிச்சி கிராமத்தில் சுரேஷை பாம்பை பிடித்துக்கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்தது. அங்கிருந்த உள்ளூர்வாசி ஒருவர்  தனது செல்போனில் இதனை வீடியோவாக எடுத்தார். பாம்பை, சுரேஷ் ஒரு  பைக்குள் வைத்தபோது, ​​அது அவரது காலுக்கு அருகில் தவழ்ந்து முழங்காலுக்கு மேல் கடித்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.


மேலும் படிக்க: RRR Movie Release Date: வலிமைக்காக பேசிய சிவா.! ஆனா கொரோனா வைத்த ட்விஸ்ட்! ஆர் ஆர் ஆர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுரேஷை அழைத்து வரும் போது அவர் சுயநினைவின்றி இருந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பாம்பு கடித்து போராடி வரும் சுரேஷ் நலம் பெற  இறைவனை வேண்டுவோம் என்று சமூகவலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.


வா வா சுரேஷ் குறித்து அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 
 “வருந்துகிறேன். கடைசியாக  நான் அவரை மருத்துவமனையில் சந்தித்தேன். திருவனந்தபுரம் மக்களுக்கு அவரது துணிச்சலான சேவைகள் தொடர கடவுள் அவரை காப்பாற்றட்டும்” என்று பதிவிட்டார்.


 






 


மேலும் படிக்க: Edappadi Palanisamy | ''அவரவர் குழந்தை அவரவர்களுக்கு முக்கியம்'' - பாஜக விலகியது ஏன் என விளக்கமாக கூறிய பழனிசாமி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடிபில் வீடியோக்களை காண