பெங்களூருவில் தெருநாய் மீது ஆடி கார் ஏற்றுவது போன்ற பயங்கர வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.


தூங்கிக்கொண்டிருந்த தெரு நாயின் மீது ஆடி காரை ஏற்றி கொடூர சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவை போலீஸாரிடம் காட்டிய அப்பகுதியினர், கார் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


கடந்த வாரம், மாநில தலைநகரில் உள்ள குடியிருப்பு காலனியில் தெருநாய்கள் கூட்டம் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு வெள்ளை நிற ஆடி கார் டிரைவர்  தனது காரைப் பின்னோக்கிச் சென்று, தூங்கிக் கொண்டிருந்த நாயின் மீது வேண்டுமென்றே ஏற்றுகிறார். அந்த நாய் துடிதுடிக்கொண்டு ஓரமாக் ஓடி கீழே விழுந்து வலியால் துடிக்கிறது. இந்த சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


இதற்கிடையில், ஆடி டிரைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உள்ளூர்வாசிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை பிடிக்க விசாரணையை தொடங்கியுள்ளனர்.


 






முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த ஒருவர் தெரு நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற வீடியோ வைரலானது. அந்த மனிதன் நாயை கட்டைகளாலும் கற்களாலும் அடிப்பதைக் காணலாம். நாய் நடமாடுவதை நிறுத்திய பிறகும், அந்த நபர் தனது குச்சியால் நாயை பலமுறை அடித்தது சிசிடிவி காட்சியில் பதிவானது. குவாலியரின் சார் ஷஹர் சதுக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், பாந்தி பாயிஸ் என அடையாளம் காணப்பட்டார். தெருநாய் தனது செல்லப் பெண் நாயை அடிக்கடி பார்ப்பதால் பயஸ் எரிச்சலடைந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண