Watch video :பீம பலம் கொண்டு காவல்நிலையத்தை சூறையாடிய தாய் மற்றும் குட்டி யானை... கேரளாவின் அரங்கேறிய அரிய நிகழ்வு!

ஒரு தாய் மற்றும் குட்டி யானை காவல் நிலையத்திற்குள் புகுந்து வேட்டையாடிய வீடியோவை கேரள காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

Continues below advertisement

கேரளா மாநிலத்தில் அதிகளவில் யானைகள் காணப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மாநிலம் இந்திய முக்கிய சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கேரளாவில் யானைக்கு அன்னாச்சிப்பழம் கொடுத்து உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல், இந்த மாநிலம் முழுவதும் யானைகளால் அடிக்கடி பொதுமக்கள் மீது தாக்குதலும் நடக்கிறது. 

Continues below advertisement

சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவில், ஒரு தாய் மற்றும் குட்டி யானை காவல் நிலையத்திற்குள் புகுந்து வேட்டையாடிய வீடியோவை கேரள காவல்துறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். கேரளாவில் உள்ள பரம்பிக்குளம் காவல்நிலையத்தில் இந்த இரு யானைகளும் சேர்ந்து இரும்பு கம்பியால் உருவாக்கப்பட்ட கிரில் கேட்டை வளைக்கின்றன. 

"காவல் நிலையத்திற்கு வந்த தாயும் குழந்தையும் என்ன செய்தார்கள் என்பதை அறிய வீடியோவைப் பாருங்கள்" என்று பரம்பிக்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மலையாளத்தில் குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


யானை இரும்பு கேட்டை உடைக்க முயலும் போது குபேரன் படத்தில் வரும் "சதீர்த்தியோ" என்ற பாடலையும் இந்த வீடியோ காட்சியுடன் இணைத்துள்ளனர். இந்த வீடியோ ஜனவரி 2 அன்று வெளியிடப்பட்டு 3,000 பார்வைகளை கடந்து இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 

 

யானை தாக்குதல் கேரளாவில் மட்டும் இல்லை. இதேபோல், சமீபத்தில் அசாமில் யானை ஒன்று ஒருவரை தாக்கியது. விவசாய நிலத்தில்  இழுத்துச் செல்வதைக் காட்டிய 14 வினாடிகள் வீடியோ வைரலானது. நிலத்தை உழுது கொண்டிருந்த போது யானை அந்த நபரை துரத்திச் சென்று தாக்கிய வீடியோ கடந்த மாதம் மிகவும் வைரலானது. 

இருப்பினும், இந்த யானைத் தாக்குதல்களில் பெரும்பாலானவை யானை வழித்தடங்களில் மனித அத்துமீறல்களின் விளைவாகவே பார்க்கப்படுகிறது. இதுபோன்ற மனிதனால் கட்டப்பட்ட தடுப்புகள் மற்றும் வேலிகள் சில பகுதிகளுக்குள் காட்டு உயிரினங்கள் நுழைவதைத் தடுக்கின்றன. காட்டுக்குள் தனது பயணத்தைத் தொடர முடியாத யானை ஒன்று எப்படி எளிதாக வேலியைத் தாண்டிச் சென்ற வீடியோவும் சமீபகாலத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola