கேரளா: ஓணம் பண்டிகையின்போது இடுக்கியில் உள்ள செம்மண்ணாரில் நடத்தப்பட்ட ஏலத்தில் பூசணிக்காய் ஒன்று ரூ.47,000க்கு விற்பனையானது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு பூசணிக்காய் ரூ.47,000 என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், இடுக்கியின் மலைப் பிரதேசத்தில் உள்ள புலம்பெயர்ந்த கிராமமான செம்மன்னாரில் நடைபெற்ற பொது ஏலத்தில் 5 கிலோ எடைக்கொண்ட பூசணிக்காய் ஒன்று ரூ. 47,000 ரூபாய்க்கு ஏலம் சென்றுள்ளது. 


கேரளாவில் ஓணம் பண்டிகை ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாட்களில் கயிறு இழுத்தல், படகு போட்டி, பொது ஏலம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பொது ஏலத்தில் தாங்கள் வளர்க்கும் கால்நடை கள், தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறி, பழங்களை மக்கள் ஏலம் விடுவர். நேற்று முன்தினம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் செம்மண்ணாற்றில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் கூட்டமைப்பு சார்பில் ஓணம் பண் டிகை பொது ஏலம் நடந்தது. ஆடு, நாட்டு கோழி, முட்டை என ஏலம் ஆரம்பத்திருந்தே அமர்க்களப்பட்டது. இதில் ஜார்ஜ் என்பவரின் பூசணிக்காய் ஏலத்திற்கு வந்தது. ஆரம்ப விலையாக ரூ. 5,000 என ஏலம் சூடு பிடிக்க தொடங்கியது. ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் பூசணிக்காயின் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தனர். முடிவில் அப்பகுதியை சேர்ந்த சிபி என்பவர் பூசணிக்காயை ரூ. 47,000க்கு வாங்கினார். ஒரு பூசணிக்காய் அதிக தொகைக்கு ஏலம் போனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


பூசணிக்காய் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் விடப்பட்டதால் இந்த ஆண்டு செம்மன்னாரில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்குள்ள வளமான மண்ணில் விளைந்த பூசணி ஒன்று ஓணம் சீசனில் இவ்வளவு விலைக்கு ஏலம் சென்று வரலாறு படைத்தது இதுவே முதல் முறை.


ஏலம் உள்ளூர் மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏலத்தில் இதன் விலை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் ரூபாய் வரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முழு ஏலத்தின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், யாரோ ஒருவர் இந்த பூசணிக்காயை அமைப்பாளர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளார். 


கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் பொருட்களை கோயில் நிர்வாகம் ஆண்டுதோறும் ஓணம் பண்டிக்கையின்போது பொதுமக்கள் முன்னிலையில் ஏலம் விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் பக்தர் ஒருவர் கோயிலுக்கு 5 கிலோ எடைக்கொண்ட பூசணிக்காயை வழங்கினார். அதை ஏலம் விடப்பட்டதன் விளைவுதான் கடைசியில் நம்ப முடியாத அளவுக்கு ரூ.47,000 ஏலம் போனது.