தமிழ்நாடு:



  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள். 

  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. 

  • கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

  • சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி மூலம் பிரச்சாரம். 

  • தமிழ்நாட்டின் குடியரசுத் தின அலங்கார ஊர்தி திருச்சி சென்றடைந்தது.

  • மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னையில் போட்டியிடம் வேட்பாளர்களை நேற்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். 


இந்தியா:



  • குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் பிரதமர் மோடி இன்று மக்களவையில் பதிலளித்து பேச உள்ளார்.

  • பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மக்களவை ஒரு மணி நேரம் ஒத்துவைக்கப்பட உள்ளது. 

  • அனைத்து மத்திய அலுவலகம் இன்று முதல் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க மத்திய அரசு உத்தரவு. 

  • ஜம்மு-காஷ்மீரில் 3 கடத்தல்காரர்கள் சுட்டு கொலை செயப்பட்டுள்ளனர். 

  • ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

  • ஆந்திராவில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


உலகம்:



  • சீனாவில் ஒரு வார காலம் வசந்த கால விடுமுறையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்.

  • ஆஸ்திரேலியாவில் விரைவில் சுற்றுலா பயணிகள் வர அனுமதி அளிக்கப்படும்.

  • ஆஃப்கானிஸ்தானில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 50 பேர் தலிபான்களிடம் சரண் அடைந்துள்ளனர். 


விளையாட்டு:



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

  • 1000ஆவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

  • புனே ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்-ரோகன் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று  அசத்தியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண