கேரளாவில் உள்ள கலமச்சேரியில் இன்று காலை நடந்த ஜெபக்கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பக்தர்கள் குவிந்திருந்த இந்த ஜெபக்கூட்டத்தில் திடீரென வெடித்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால்  மக்கள் சிதறி ஓடினர். ஒரு பெண் விபத்திலே உயிரிழந்த நிலையில், மற்றொரு பெண் மேலும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய ஒரு கிறிஸ்துவ மத குழுவான யெகோவாவின் கூட்டம் இன்று கேரள மாநிலம் களமச்சேரியில் நடைப்பெற்றது. அப்போது திடீரென அந்த மாநாட்டு மையத்தில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், 36க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 


இந்த நிலையில், இந்த கோர வெடிகுண்டு விபத்திற்கு யார் காரணம்? என்று ஒட்டுமொத்த இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளாகிய தருணத்தில் கேரளாவைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் இந்த சம்பவத்திற்கு காரணம் தான் என்று காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் அவர் கூறிய தகவல்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும், தற்போது டொமினிக் மார்ட்டின் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


குண்டு வெடிப்பிற்கு என்ன காரணம்..? 


கொச்சி களமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் இன்று காலை வெடிகுண்டு வைத்தது தம்மனத்தைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் நான் தான் காரணம் என கேரள போலீசாரிடம் சரணடைந்தார். அதில், டொமினிக்கின் தொலைபேசியில் ஐஇடி- ஐ வெடிக்க பயன்படுத்திய ரிமோட் கண்ட்ரோலின் காட்சிகளையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சில சிசிடிவி காட்சிகளும் அதில் சிக்கியது. 


, யேகோவாவின் குழுவின் உறுப்பினராக இருந்த டொமினிக் மார்ட்டின், கொடகரா காவல்நிலையத்தில் சரணடைவதற்கு முன்பு அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் லைவில், நான் தான் குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று பேசினார். அப்போது அவர், “ தொடர்ந்து, வெறுப்பை வளர்க்கும் விதமாக பேசுகிறீர்கள். அதை நிறுத்துங்கள் என கிறிஸ்துவப் பிரிவினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால், தொடர்ந்து அவர்கள் இப்படியான செயல்களை மட்டுமே செய்தனர். நான் சொல்வதை கேட்கவில்லை. அதன் காரணமாகவே மாநாட்டில் வெடிகுண்டு வைக்க முடிவு செய்தேன்” என்று தெரிவித்தார். 


முதற்கட்ட விசாரணையின்படி, வெடிபொருட்கள் டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்தன, முதல் வெடிப்பு காலை 9:40 மணிக்கு ஏற்பட்டது என்று கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப் தெரிவித்துள்ளார்.