கேரளாவில் பள்ளி பருவத்தில் காதலித்த ஜோடிக்கு மீண்டும் காதல் மலர்ந்ததால் குடும்பத்தைவிட்டு  தலைமறைவாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


96 காதல்


தமிழில் விஜய் சேதுபதி, திர்ஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா ஜானு என்ற கதாபாத்திரத்திலும்  நடித்திருப்பார்கள். பள்ளி பருவ காதல் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் 96. இந்த படத்தில் பல வருடங்கள் கழித்து நடைபெறும் முன்னாள்  மாணவர்கள் சந்திப்பில் இருவரும் சந்தித்து கொள்வார்கள். அப்போது அவர்களுக்குள் இருந்த காதலை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.


மலர்ந்த காதல்


இந்நிலையில், கேரளாவில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அந்தவகையில், கேரளா ஏர்ணாகுளம் மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.  தமிழகத்தில் மிகவும் பிரபலமான 96 பட பாணியில்  ரீ யூனியன் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் 50 வயதை தாண்டிவிட்ட நிலையிலும், இளம் வயதினரை போல் உற்சாக இருந்தனர். இந்த சந்திப்பில் பள்ளி பருவத்தில் காதலித்த ஒரு ஜோடிகள் சந்தித்து பேசினர். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் காதலித்து வந்துள்ளதாகவும், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், வீட்டில் நிச்சயிக்கப்பட்டவர்களை அவரவர் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


காதல் ஜோடி தலைமறைவு


அதன் பின்பு, அவர்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லை. தற்போது அவர்களுக்கு 50 வயதாகி உள்ளது.  பள்ளி ரீயூனியன் நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில் மேற்கண்ட பள்ளி காதல் ஜோடிகளும் சந்தித்தனர். சந்திப்பின்போது பள்ளி பருவ காதல் நினைவூட்டப்பட்டதால்  50 வயதை தாண்டிய காதல் ஜோடி தலைமறைவாகி உள்ளனர். 


புகார்


ரீ யூனியன் நிகழ்ச்சிக்கு சென்ற இருவரும் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் ஏர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். கணவரை காணவில்லை என மனைவியும், மனைவியை காணவில்லை என கணவரும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமறைவான காதல் ஜோடியை தேடி வருகின்றனர்.  பள்ளி பருவத்தில் காதலித்த இருவரும் தற்போது பள்ளி ரீ யூனியன் நிகழ்ச்சியில் சந்தித்து, 50 வயதில் தலைமறைவாகி உள்ள  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் படிக்க


Crime : டேட்டிங் ஆப்பில் காதல்...4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை...என்ன நடந்தது...?