Crime : பெங்களூருவில் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.


ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் 28 வயதான அர்ச்சனா. இவர் பிரபல விமான நிறுவனத்தில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி வந்துள்ளார்.  இவர் டேட்டிங் ஆப் மூலம் ஆதேஷ் என்ற நபரிடம் பேசி வந்துள்ளார். இவர் ஆதேஷை காண்பதற்காக கடந்த வாரம் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்துள்ளார்.  அர்ச்சனா, ஆதேஷ் என்பவரிடம் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர்.  நண்பராக இருந்த இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இவர் அடிக்கடி சந்தித்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது.  


இந்நிலையில் தனது காதலனை பார்ப்பதற்காக கடந்த வாரம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்த நிலையில், சண்டை ஏற்பட்டது.  இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீடித்த நிலையில், அப்போது ஆத்திரத்தில் இருந்த அர்ச்சனா தனது குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 


அதிர்ச்சி அடைந்த ஆதேஷ், அர்ச்சனாவை மீட்டு அருகில்  இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனே இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  சந்தேகத்தில் பேரில் ஆதேஷ் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "அர்ச்சனா, ஆதேஷ் பல ஆண்டுகளாக தொடர்பில் இருந்துள்ளனர். இந்நிலையில் அர்ச்சனா அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.  அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று விசாரித்து வருகிறோம். ஆண் நண்பர் ஆதேஷும் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளனர்.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில்தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் படிக்க


Crime : கோவையில் பட்டப்பகலில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு ; 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..