உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் உள்ள ஆலயத்துக்கு 5 பக்தர்கள் ஹெலிகாப்டரில் சென்றனர். அப்போது ஹெலிபேடை நெருங்கியபோது இயந்திரக் கோளாறு காரணமாக, ஹெலிகாப்டர் திடீரென சுழன்று பள்ளத்தில் இறங்கியது. நல்லவேளையாக யாருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. 


கேதார்நாத் கோயிலுக்குச் சென்ற ஹெலிகாப்டர்:


உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக, கேதார்நாத் அரசாங்கம் தாம் யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஹெலிகாப்டர் சேவையை வழங்குகிறது. அதேபோல், இந்த ஆண்டும் சுமார் 9 ஹெலிகாப்டர் நிறுவனங்கள் கேதர்நாத் தாமுக்கு பக்தர்கள் செல்ல ஹெலிகாப்டர் சேவையை வழங்கியுள்ளது. இப்படியான நிலையில்தான் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. 


சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணிகள் ஏற்பட்ட ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டர் ஓட்டிய விமானியின் சாமர்த்தியத்தால் இந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் பத்திரமாக தரையிறங்கினர். 






என்ன நடந்தது..? 


தற்போது கிடைத்த தகவலின்படி, ஹெலிகாப்டர் மேல் இருக்கும் இறக்கை சேதமடைந்துள்ளது. கோளாறு குறித்த தகவல் கிடைத்ததும் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் பதற்றமடைந்துள்ளனர். இதையடுத்து, ஹெலிகாப்டர் ஓட்டிய விமானி புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கி, தான் உயிரை மட்டுமல்லாது அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். 


துரிதமாக செயல்பட்ட விமானி ஹெலிகாப்டரை கேதார்நாத் தாமில் கட்டப்பட்டுள்ள ஹெலிபேட் அருகே சுழன்றபடி, அவசரமாக தரையிறக்கினார். இந்த ஹெலிகாப்டர் கிரிஸ்டல் நிறுவனத்தை சேர்ந்தது என்று கூறப்படுகிறது. 


தினமும் 25 ஆயிரம் பேர் பயணம்: 


பாபா கேதார்நாத்தை தரிசனம் செய்ய தினமும் சுமார் 20 முதல் 25 ஆயிரம் பக்தர்கள் வருகிறார்கள். இதன் காரணமாக ஹெலிகாப்டர் சேவையை அதிகளவில் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். கேதார்நாத்தில் கடந்த 11 ஆண்டுகளில் 10 விபத்துகள் நடந்துள்ளன. 






இதுகுறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், “ இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கிரெட்டன் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலி 6 பயணிகளுடன் கேதார்நாத்துக்கு புறப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் கேதார்நாத் ஹெலிபேடுக்கு 100 மீட்டர் முன்பு மண்ணில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.” என்றார். 


கேதார்நாத் தாமில் கிரிஸ்டல் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கியது குறித்து டிஜிசிஏ இன்று விசாரணை நடத்தவுள்ளது. இதுகுறித்து, கர்வால் கமிஷனர் வினய் சங்கர் பாண்டே கூறுகையில், ”ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் சுழன்ற தொடங்கியது. இதையடுத்து, விமானி மிகவும் புத்திசாலித்தனமாக தரையிறக்கினார். ஹெலிகாப்டரில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இருந்தனர்” என்று தெரிவித்தார்.