காஷ்மீர் பிரிவினைவாத இயக்க ஆதரவாளர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லி என் ஐ ஏ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் யாசின் முக்கிய குற்றவாளியாக அறிவித்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்


காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன. பல்வேறு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும்,  தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும், காஷ்மீரின் அமைதியை சீர்குலைததாகவும் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. பல குற்றச்சாட்டுகள், பல வழக்குகள் என சட்டத்தால் கடுமையாக துரத்தப்பட்டார் யாசின். இந்நிலையில் அவர் 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன்பின்னரும் அவர் மீதான வழக்கு மேலும் அழுத்தமாக பதியப்பட்டது. 


சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழும் அவர் மேலும்  கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் யாசின். நீதிமன்றத்தின் முன்பு தன் மீதான அனைத்து குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் அவருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக,யாசின் மாலிக் மீதான நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருந்தது. பாக் வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்''யாசின் மீது பொய்க்குற்றச்சாட்டை இந்தியா ஜோடித்து அவரை சிறையில் அடைத்துள்ளது.இதற்காக இந்திய தூதரிடம் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண