மதிய சாப்பாட்டுக்கு மாட்டுக்கறி கொண்டு வந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


அசாம் மாநிலத்தின் கோல்பரா மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் 56 வயதான தலைமை ஆசிரியை ஒருவர் மதிய சாப்பாட்டுக்கு மாட்டுக்கறி கொண்டு வந்துள்ளார். தான் கொண்டு வந்த மாட்டுக்கறியை உடன் பணியாற்றும் சிலருக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். இந்த விவகாரம் பள்ளி  மேலாண்மைக்குழுவுக்கு தெரியவரவே, மாட்டுக்கறி கொண்டு வந்த ஆசிரியைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதோடு விடாமல் அவர் மீது போலீஸில் புகாரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்,  பிரிவு 153A, (இரு சமூகத்துக்கு இடையே மோதலை உருவாக்குதல்),  295A (மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் கீழ் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது




இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், பள்ளி மேலாண்மைக் குழு கொடுத்துள்ள புகாரின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு மாட்டிறைச்சியை ஆசிரியை கொண்டு வந்து சிலருக்கு பகிர்ந்து அளித்துள்ளார். இது அங்குள்ள குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பள்ளி மேலாண்மைக் குழு குறிப்பிட்டுள்ளது என்றனர்.


மலையாள நடிகை..


சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு நிகிலா நேர்காணல் அளித்தார். அவரிடம் மாட்டுக்கறி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதாவது மாட்டை இறைச்சிக்காக வெட்டுவது சரியா?தவறா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நம்ம ஊரில் பசுவை வெட்டலாமா வெட்டக்கூடாதா என்ற விதிமுறை எல்லாம் இல்லை. பசுவை வெட்டக்கூடாது என்பது இப்போதுதான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விலங்குகளை பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து விலங்கையும்தான் பாதுகாக்க வேண்டும்.






எந்த விலங்கையும்தான் கொல்லக்கூடாது. வெட்டக்கூடாது என்றால் எதையுமே வெட்டக்கூடாது. கோழி மீனை சாப்பிடலாம்.கோழி ஓர் உயிர் இல்லையா? அதற்கு ஒரு நியாயமா? மாற வேண்டுமென்றால் முழு சைவமாக மாற வேண்டும். இல்லையென்றால் பசுவுக்கு சலுகையெல்லாம் கூடாது. சாப்பிடலாம் என்றால் அனைத்தும் சாப்பிடலாம். இல்லை என்றால் எதுவுமே சாப்பிடக் கூடாது"  எனக் குறிப்பிட்டுள்ளார்