கர்நாடகாவின் முதோல் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் பாகிஸ்தானின்  தீர்மான நாளை கொண்டாடி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக கைது செய்யப்பட்டார். குத்மா ஷேக் என்ற 25 வயதான அந்த இளம்பெண் பாகிஸ்தானின் தீர்மான நாளை கொண்டாடி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததாக தெரிகிறது. மார்ச் 23ம் தேதி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் அதற்காக மார்ச் 24ம் தேதி கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 


நடந்தது என்ன?


மார்ச் 23ம் தேதி குத்மா தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பாகிஸ்தானின் குடியரசுதின போஸ்டரை பகிர்ந்து எல்லா நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் அல்லா ஆசீர்வதிக்கட்டும் என குறிப்பிட்டுள்ளார்.  இதனைப் பார்த்த அருண்குமார் என்பவர் காவல்நிலையத்தில்புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் பாகிஸ்தானின் தீர்மான நாளை கொண்டாடும் விதமாக இருதரப்புக்கு இடையே வன்முறையை தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனை அடுத்து இருதரப்புக்கு இடையே வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 


முன்னதாக ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா அதிகம் கவனிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்தனர்.  


இது குறித்து நியூஸ் மினிட்டுக்கு பேசிய காவல் அதிகாரி லேகேஷ், '' பாகிஸ்தானின் தீர்மான நாள் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனால் அதுகுறித்து அவர் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.  இரு நாடுகளுக்கு இடையே வன்முறையை தூண்டும் விதமாக இது இருப்பதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்


மார்ச் 24ல் கைது செய்யப்பட்ட குத்மா மார்ச் 25ம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.  அவர் ஏன் அதனை பதிவு செய்தார், என்ன நோக்கம் என்ற விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்


தீர்மான நாள்..


1940ம் ஆண்டு லாகூர் தீர்மானம் பிரிட்டிஷ் இந்தியாவில் வாழும் முஸ்லீம்களுக்கு தனி நிலம் கோரி, அகில இந்திய முஸ்லீம் லீக்கின் ஆண்டு அமர்வின் போது நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தானின் உருவாக்கத்தில் இது ஒரு முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அதுவே தீர்மான நாளாகவும் கொண்டாடப்படுகிறது.


ஓட்டலில் தீர்ந்து போன பீப் கறி: ஆத்திரமடைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்; கண்டக்டர் பலி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண