சமூக வலைதளங்களில் எப்போதும் யானைகள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக யானைகள் சற்று சிக்கலில் மாட்டிக் கொண்டு தவித்தால் அந்த வீடியோவை பலரும் பார்த்து பரிதாபம் கொள்வார்கள். அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் யானை கூட்டம் ஒன்று சிக்கலில் மாட்டி தவிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


இதுதொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் யானைகள் கூட்டம் ஒன்று கர்நாடக காட்டுப்பகுதியில் சுற்றும் போது ஒரு நீர் தேக்கத்தை கடக்க முடியாமல் தவித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த யானைகளை அதற்கு பின்பு கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அங்கு இருந்து மீட்டு வனத்திற்குள் விட்டதாக கூறப்படுகிறது. 


 






இந்தப் பதிவை செய்திருந்த வனத்துறை அதிகாரி மற்றொரு பதிவை செய்துள்ளார். அதில், “இந்த 5 யானைகளும் நீர் தேக்கத்திற்குள் தெரியாமல் விழுந்துள்ளன. ஆகவே நாம் காட்டுப்பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பை வன விலங்குகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






 






 






 


மேலும் படிக்க: பூஸ்டர் 3-வது தடுப்பூசியா? ஏன் போடவேண்டும்? ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?