தமிழ்நாடு:



  • கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

  • பொங்கல் பண்டிகைக்காக இன்று சிறப்பு 16,768 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

  • தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழக துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. வரும் 24ஆம் தேதி கலாந்தாய்வு நடைபெறும் என தகவல்.

  • ராமநாதபுரம் துறைமுகத்தில் இருந்த படகுகளில் தீ விபத்து. 

  • மதுரையில் கலைஞர் நினைவக நூலகத்திற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தமிழ்நாடு அரசு அனுமதி.


இந்தியா:



  • புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு இல்லை என்று ஆளுநர் தமிழிசை விளக்கம்

  • பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை விசாரிக்க  ஓய்வு பெற்ற நீதிபதி

  • அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தல்

  • டெல்லியில் 1000 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று உறுதி. 

  • இந்தியாவில் முதல் நாளில் 9 லட்சம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல். 


உலகம்:



  • வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

  • தென்னாப்பிரிக்காவில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளம்.

  • பிரேசிலில் மலை ஒன்று பெயர்ந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர்.

  • அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு. 


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடக்கம். 

  • இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  • கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி காயத்திலிருந்து குணம் அடைந்து மீண்டும் களமிறங்குகிறார்.

  • ஆஸ்திரேலியன் ஓபன்: கொரோனா தடுப்பூசி, விசா சர்ச்சை தொடர்பான வழக்கில் ஜோகோவிச் வெற்றி.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண