கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கவனக்குறைவாக செய்த சாதாரண காரியம் அவரின் உயிரையே பரித்துள்ளது. டூத் பேஸ்ட் என நினைத்து எலி மருந்தில் பல் துலக்கியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சுலியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஷர்வயா. கர்நாடகத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த பிரச்னை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே ஷர்வயா கல்லூரி விடுமுறையால், வீட்டில் இருந்துள்ளார். அவர் வீட்டில் இருந்தபோது, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஷர்வயா வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல் துலக்குவதற்காக அவர் பிரஷ் எடுத்து பேஸ்டை அப்ளை செய்துள்ளார். பல் துலக்க ஆரம்பித்தது அது பேஸ்ட் இல்லை என்பதை உணர்ந்து அது என்ன க்ரீம் என பார்த்துள்ளார். அப்போது தான் தவறுதலாக டூத் பேஸ்ட்-க்கு பதிலாக எலி மருந்தை வைத்து பல் துலக்கியது அவருக்கு தெரியவந்தது. 



இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர் உடனடியாக வாயை சுத்தம் செய்துள்ளார். பேஸ்டை வைத்து பல் துலக்கிவிட்டு வீட்டினரிடம் சொன்னால் கேலி செய்வார்கள் என்ற எண்ணத்தில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். இருப்பினும் அன்றைய தினம் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதனால் அவரும் எலி மருந்தில் பல் துலக்கியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு மூன்று நாட்கள் வரை எந்த பிரச்சனையும் இல்லாததால் அந்த விஷயத்தை அவர் முற்றிலுமாக மறைத்தே விட்டார். ஆனால் அதன் பிறகு தான் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, எலி மருந்தில் பல் துலக்கிய விஷயத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இதனையடுத்து அவரை அவரது பெற்றோர்கள், மங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். வயிற்று வலியால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஷர்வயா கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். மின் வெட்டு ஏற்பட்டதால், அறியாமல் எலி மருந்தை எடுத்து பல் துளக்கிய விஷயம் தெரிந்திருந்தாலும், சுலியா மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று எலி மருந்தை பேஸ்ட் என்று நினைத்து பல விலக்கி உயிரை இழந்த சம்பவங்கள் பல நடந்துள்ளன என்பதால், பேஸ்ட் போன்ற வடிவத்தில் செய்யப்படும் எலி மருந்துகள் நிறுத்தப்பட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தச்சம்பவம் சுலியா பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.