கர்நாடகாவில் காணாமல்போன தனது உரிமையாளரை பத்திரமாக மீட்ட செல்லப்பிராணியான நாயின் செயல் அனைவரையும் வியக்க வைத்தது.
வளர்ப்பு நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக பார்க்கப்படுகிறது. இன்றளவும் கூட பணக்காரர்கள் வீட்டு ஏசி அறையிலும், ஏழை வீட்டு குடிசையிலும் செல்லப் பிராணிகள் வீட்டில் ஒரு உறுப்பினராக நாய்கள் இருந்து வருகிறது. அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாய்களை பார்க்கின்றனர். செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பு உண்மையில் விலைமதிப்பற்றது. அவர்கள் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் பாசம் அளவு கடந்தது. அவர்கள் சாப்பிட்ட உணவு உட்பட அனைத்தும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பகிர்வர்.
வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக ஒரு பெயரை வைத்து அன்போடு அழைப்பது அழகானதாக இருக்கும். அதேபோன்று, அந்த செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட நாய்களும் நன்றியுள்ள ஜீவன்களாக இருக்கிறது. உரிமையாளர்களின் வீட்டிற்க காவலாளி போன்று நாள் முழுவதும் இருக்கிறது. பிறகு அவர்கள் எங்கெயாவது சென்றால் அவரை பின்தொடர்வது, அவர்கள் தினமும் செய்கின்ற வேலையை நோட்டமிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. அவர்கள் கூட பழகப்பழக அவர்களை பற்றி நன்றாக புரிந்து கொள்கின்றது.
அந்த வகையில் கர்நாடகாவில் காணாமல் போன தனது உரிமையாளரை பத்திரமாக மீட்ட செல்லப்பிராணியான நாயின் செயல் அனைவரையும் வியக்க வைத்தது கர்நாடகாக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சேகரப்பா(55). இவர் தினமும் சிவமொக்காவில் உள்ள வனப் பகுதிக்கு விறகு சேகரிக்க செல்வது என்பது வழக்கமான ஒன்று. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வேலையை செய்து வருகிறார் என கூறப்படுகிறது. இவருக்கு செல்லப்பிராணியான டாமி எனும் பெயரிப்பட்ட நாய் ஒன்று இருக்கிறது.
கடந்த 3 மாதங்களாக செல்லப்பிராணியான டாமியை வளர்த்து வருகிறார். தினமும் விறகு சேகரிக்க செல்லும் போது டாமியும் கூட அழைத்து செல்வது வழக்கமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் சேகரப்பா கடந்த சனிக்கிழமை அன்று விறகு சேகரிக்க காலை 6 மணிக்கு சென்றார். வழக்கமாக இவர் காலை சென்றால் மாலை வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் அன்று இரவு 7 மணிவரை வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அவர் உறவினர்கள் சிவமொக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கதினரிடமும் அவர்கள் தெரிவித்தனர். பின்பு, சேகரப்பாவின் நண்பர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர் சென்ற வனப்பகுதி மற்றும் அவர் வழக்கமாக செல்லக்கூடிய இடங்களில் நண்பர்கள், உறவினர்கள் என 50 பேர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்பு, அடுத்த நாள் காலையில் சேகரப்பாவின் செல்லப்பிராணியான டாமி தேடும் பணியில் ஈடுபட்டது. அவர் வழக்கமாக செல்லும் காட்டுக்குள் சென்றது. பின்பு, ஒரு இடத்தில் குரைக்க தொடங்கியது, இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு சென்றனர். அப்போது சேகரப்பா ஒரு மரத்தின் கீழ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பாரத்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறியதாவது, உடல் சோர்வு காரணமாக அவர் மயக்கமடைந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைபோன்று சமீபத்தில், அமெரிக்காவின் நெவாடாவில் நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த 53 வயதான நபரை அவருடைய செல்லப்பிராணியான நாய் மீட்டது