கர்நாடகாவில் உள்ள ராமநகராவில் சட்டமேதை அம்பேத்கர் மற்றும் பெங்களூரை நிறுவிய கெம்பகவுடா ஆகியோரது சிலைகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்றார்.  




அப்போது, இந்த விழாவில் அமைச்சர் கர்நாடக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் நாராயனும், கர்நாடகாவின் காங்கிரஸ் எம்.பி. சுரேஷூம் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் நாராயண் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். நாராயண் பேசும்போது, “வாக்குகளை மட்டும் பெறுகிறார்கள்.  ஆனால், ஒன்றும் செய்வதில்லை. நாங்கள் ராமநகர மக்களுக்கு வளர்ச்சியை கொண்டு வர நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் யாரோ ஒருவரின் நிலத்தில் கை வைப்பவர்கள் அல்ல.” என்று கூறினார்.





அவரது பேச்சைக் கேட்ட எம்.பி. சுரேஷ் கோபமடைந்தார். உடனே, மேடையில் அமைச்சர் நாராயண் பேசிக்கொண்டிருந்தபோதே கோபத்திலே எம்.பி. சுரேஷ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமைச்சர் நாராயணும் எம்.பி.யுடன் மேடையிலே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, எம்.பி. சுரேஷூடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெங்களூர் எம்.எல்.சி. ரவியும் சேர்ந்து கொண்டார். அவர் அமைச்சர் நாராயணிடம் இருந்து மைக்கை பிடுங்க முயற்சித்தார். பின்னர், அமைச்சரின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் எம்.பி. மேடையிலே  போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அமைச்சரையும், காங்கிரஸ் எம்.பி.யையும் சமாதானப்படுத்தினர்.


முதல்வர் பங்கேற்ற விழாவின் மேடையிலே ஆளுங்கட்சியின் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும் சண்டையிட்டுக் கொண்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண