கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை பிறப்பித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நாளை இரவு முதல் முழு ஊரடங்கை பிறப்பித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

COVID curfew to be implemented in the state from tomorrow 9 pm for the next 14 days. Essential services allowed b/w 6-10 am. After 10 am shops will close. Only construction, manufacturing & agriculture sectors allowed. Public transport to remain shut: Karnataka CM

(File photo) pic.twitter.com/MSg6S83pDK
— ANI (@ANI) April 26, 2021

கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே அனுமதி என்றும் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும் கூறினார்.

We will vaccinate people above the age of 18 years free of cost at government hospitals across the state: Karnataka CM BS Yediyurappa pic.twitter.com/s6KlfGiQqK
— ANI (@ANI) April 26, 2021

முதல்வர் எடியூரப்பா இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

முதல்வர் எடியூரப்பா இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கர்நாடகாவில் கொரோனா நிலைமை கை மீறிபோய்விட்டதாகவும், அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.