பொதுவாக மழை காலங்களில் நீர் வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அந்தவகையில் தற்போது கர்நாடகாவில் அமைந்துள்ள ஜோக் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஓடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக அமைந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி நதியின் நீர்பிடிப்பு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகாவின் ஷராவதி நதியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக ஷராவதி நதியில் அமைந்துள்ள ஜோக் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் விழுவது மிகவும் அழகாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “இது நயாகரா நீர் வீழ்ச்சி அல்ல. இந்தியாவின் ஷிமோகாவில் அமைந்துள்ள ஜோக் நீர்வீழ்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பலரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த நீர்வீழ்ச்சி மிகவும் அருமையான ஒன்று என்று சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஜோக் நீர்வீழ்ச்சி:
கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் ஷராவதி நதியில் ஜோக் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. ஷராவதி நதி 810 அடி உயர்த்திலிருந்து விழும் போது ஜோக் நீர்வீழ்ச்சி உருவாகிறது. ஷராவதி நதி ராஜா,ராணி,ரோர் மற்றும் ராக்கெட் என நான்காக பிரிந்து ஒன்று சேர்ந்து கீழே ஜோக் அருவியாக விழுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்