Karnataka: பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, போதை மாத்திரைகள்...! கர்நாடகாவில் அதிர்ச்சி...

கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் பையில் சோதனை செய்ததில் ஆணுறை, சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே மொபைல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தொடர்ந்து தகவல் வந்தது. இதையடுத்து, கர்நாடகாவில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளிலும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பைகளில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சில மாணவர்களில் பைகளில், அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கும் வகையில் ஆணுறை, கருத்தடை மாத்திரை, சிகரெட்டுகள் 'லைட்டர்'கள், போதைக்காக பயன்படுத்தும் 'ஒயிட் னர்'கள், அதிகமான பணம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

Continues below advertisement

ஆணுறை, போதை மாத்திரைகள், மது:

புகாரை அடுத்து பல பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பலரின் பைகளில், மொபைல் போன் மட்டுமின்றி, அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாணவி ஒருவரின் பையில், ஆணுறை கண்டு பிடிக்கப்பட்டது.  மேலும் சிலர் பைகளில், போன்கள் கர்ப்பத் தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள், போதைக்காக பயன்படுத்தும் ஒயிட்னர்கள், அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டன. மாணவர் ஒருவரின் தண்ணீர் பாட்டிலில், மதுபானம் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதை கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  பின்பு, மாணவர்களை எச்சரிக்கையாக கையாளும்படி, பெற்றோருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவர்களை நல்ல வழியில் கொண்டு பெற்றோர்களின் கடமையும் ஒன்று என்று அறிவுறுத்தினர். தற்போது மாணவர்களுக்கு, 10 நாட்கள் விடுமுறை அளித்துள்ளோம். மாணவர்களை சரியான பாதைக்கு கொண்டு வர, பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பெங்களுருவில் 80 சதவீதம் பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் பள்ளியில் வயதுக்கு மீறிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அம்மாநிலத்தேயே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பேரதிர்ச்சி

உடனே பெற்றோர் வரவழைக்கப்பட்டு அறிவுரை அனுப்பி  கூறி அனுப்பினர். மாணவர்களின் நடவடிக்கைகள், மாநிலத்தையே பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. சமீப நாட்களாக சிறார்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. 

இளம் வயதிலேயே சிறார்கள் புகை பிடிப்பது, மதுபானம் அருந்துவது, வீட்டுக்கு தெரியாமல் பள்ளிகளின் பணம் திருடுவது, படிப்பில் ஆர்வம் காண்பிக்காமல் ஊர் சுற்றுவது, மொபைல் போன்களில் ஆபாச படங்கள் பார்ப்பது உட்பட, பல விதமான தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்கள் போன் பயன்படுத்த, பெற்றோர் வாய்ப்பளிக்காத நிலை இருந்தது.

கொரோனா தொற்று பரவிய பின், அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் தங்கள் பிள்ளைகளுக்கு புதிதாக மொபைல் வாங்கி கொடுத்தனர். தற்போது, கட்டுக்குள் வந்து, மாணவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரத் துவங்கி விட்டனர். ஆனால், மொபைல் போனுக்கு அடிமையாகி விட்டனர்.

 

மேலும் படிக்க

Crime : உயிரிழந்த அம்மா அழைத்ததாக இன்ஸ்டாவில் பதிவு..! சென்னை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...

Crime: தலைக்கு ஏறிய போதை... பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை..!

Continues below advertisement