பெங்களூரில் லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் தன்னுடன் இருந்த பெண்ணை காதலர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


லிவ் இங் டு கெதர்:


பெங்களூரில் சந்தோஷ் சுமி என்ற நபர் கடந்த சில ஆண்டுகளாக கிருஷ்ண குமாரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக இருவரும் தனியாக வீடு எடுத்து லிவ்-இன் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


தனியார் ஸ்பா ஒன்றில் வேலை பார்த்து வந்த சந்தோஷ் தமி, அழகு சாதன நிலையத்தில் ஒன்றில் வேலை பார்த்து வரும் கிருஷ்ண குமாரி மீது காதல் கொண்டுள்ளார். இருவரும் ஒரே துறையில் வேலை செய்து வந்தததால் நட்பாக பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி தற்போது லிவ்-இன் டுகெதர் முறையில் இருந்து வந்துள்ளனர். 


பல பெண்களுடன் தொடர்பு:


இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த போதிலும் சந்தோஷ் தமி பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், பல பெண்களின் செல்போன் நம்பர்களை பெற்றுகொண்டு அவர்களுடன் காதல் ரீதியாகவும், ஆபாச ரீதியாகவும் நெருங்கி பழகியுள்ளார். அதிலும், குறிப்பாக கிருஷ்ண குமாரியின் நெருங்கிய தோழிக்கு கடந்த சில நாட்களாக சந்தோஷ் தொடர்ந்து தனது செல்போனிலிருந்து காதல் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.


ரத்த வெள்ளத்தில் காதலி:


இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்த கையோடு தனது அறையில் சந்தோஷ் மது அருந்தி, கிருஷ்ண குமாரியின்  தோழிக்கு பல மெசேஜ்கள் அனுப்பிவிட்டு வீடியோ கால் அட்டெண்ட் செய்யும்படி தொந்தரவு செய்துள்ளார். அந்த நேரத்தில் அந்த பெண் அருகில் கிருஷ்ண குமாரி உடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து கோவமடைந்த கிருஷ்ண குமாரி தனது காதலனின் இவ்வாறான செயல்களை கண்டு பணியில் இருந்து வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். 


வீட்டுக்கு சென்ற சில மணி நேரத்திலேயே சந்தோஷ் தொலைபேசியில் இருந்து கிருஷ்ணகுமாரி தோழிக்கு வீடியோ கால் ஒன்று சென்றுள்ளது. அந்த வீடியோ காலை ஆன் செய்து பார்த்தபோது கிருஷ்ணகுமாரியை சந்தோஷ் கடுமையாக தாக்கியது தெரியவந்தது. மேலும், கிருஷ்ணகுமாரியில் தலையை சந்தோஷ் கொடூரமாக இடித்துள்ளார். சில வினாடிகளில் வீடியோ கால் துண்டிக்கப்பட, பதறிப்போன அந்த பெண் தனது நண்பர்களுடன் கிருஷ்ண குமாரி நிலையை சொல்லி அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த அறையில் கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். 


சந்தேக காதலன்:


கொடூரமாக தாக்கிவிட்டு இதை எதையும் கண்டுகொள்ளாமல் சந்தோஷ் மது குடித்துள்ளார். எதற்காக இப்படி செய்தாய் என்று கேள்வி கேட்டபோது, கிருஷ்ணகுமாரி பல ஆண்களுடன் தொடர்பில் இருந்தால் அது குறித்து கேட்டபோது எனக்கு ஒழுங்கான பதில் எதுவும் சொல்லவில்லை. கோவத்தில் இவ்வாறு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இரத்த வெள்ளத்தில் இருந்த கிருஷ்ணகுமாரியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரத்தப்போக்கு அதிகளவில் வெளியேறியதால் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 


இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் பீமாசங்கர் தெரிவிக்கையில், “கொலை செய்யப்படுவதற்கு முன்பு, கிருஷ்ணகுமாரி இரவு 9.45 மணியளவில் தனது தோழிக்கு போன் செய்து சண்டை பற்றி தெரிவித்தார். அரை மணி நேரம் கழித்து அவர் நண்பருக்கு வீடியோ கால் செய்தார், அங்கு அவர் தனது காதலன் கிருஷ்ணகுமாரியைத் தாக்குவதைப் பார்த்தார். நண்பர் ஒருவர் வந்து பார்த்தபோது, ​​கிருஷ்ணகுமாரி ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்தார். எதிர்ப்பட்ட போது, ​​சந்தோஷ் தன்னுடன் உறவில் இருந்தும் அவள் வேறு ஆண்களுடன் பேசிக் கொண்டிருந்ததால் தான் அவளை அடித்ததாகக் கூறியுள்ளார். நேபாளத்தில் உள்ள கிருஷ்ணகுமாரியின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.