கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில், முஸ்லிம் மாணவிகளுடன் இந்து மதத்தைச் சேர்ந்த வகுப்பு தோழிகள் கைகோர்த்து நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஹிஜாப் சர்ச்சையால் கர்நாடகாவில் ஒருவாரம் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஹிஜாப் விவகாரம் பெரிதான உடுப்பியில் உள்ள பெண்களுக்கான அரசு கல்லூரியிலும் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொண்டனர். முஸ்லிம் பெண்களை அவர்களது இந்து தோழிகள் கல்லூரிகளுக்குள் கைகோர்த்து அழைத்துச் செல்வதைக் காட்டும் பல படங்கள் இணையத்தில் வெளிவந்தன. கல்லூரிக்குள் நுழைவதற்கு முன்பு மாணவிகள் ஹிஜாப் மற்றும் புர்காவை கழற்றிக் கொண்டிருந்தனர்.
சில உயர்நிலைப் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் கைகோர்த்து நடந்து செல்லும் படம் இப்போது வைரலாகி, ஓயாத பிரச்னைக்கு மத்தியில் நாட்டின் சாரமாகப் போற்றப்படுகிறது.
மாண்டியாவில் உள்ள மாண்டியா அரசு மகளிர் கல்லூரியில், ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து வந்த பல முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பு அவற்றை அகற்றினர். வெளியில் பெண்களுக்கான அறை கிடைக்காததால், ஹிஜாப் மற்றும் புர்காவை பொது இடத்தில் அகற்றினர். பலருக்கு அவர்களின் இந்து நண்பர்கள் இந்த பணியில் உதவினர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வுகள் நெருங்கி வருவதால் ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
கடந்த திங்கள்கிழமை உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டதும் இதே போன்ற காட்சிகள் மற்ற பள்ளிகளிலும் காணப்பட்டன. பள்ளிகநான்கு நாட்களுக்கு மூடிய பிறகு, இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள், ஒருவர் பொட்டுடன், மற்றொருவர் ஹிஜாப் அணிந்து, கைகோர்த்துக்கொண்டு, உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தனர்.
வெறுப்பு மற்றும் வன்முறை இருந்தபோதிலும் மத நல்லிணக்கத்தைக் காட்டும் இதே போன்ற படங்களை பல அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் 500 வழக்கறிஞர்கள், இரண்டு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் சி எஸ் துவாரகநாத் உட்பட 700க்கும் மேற்பட்டோர் பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள், சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து கவலை தெரிவித்தனர். இது முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பொது அவமானத்தை எதிர்கொள்ளும் பல நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது என்றும் கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்