இளைஞர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள், சமூக வலைதளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதாகவும், இதுபோன்ற அணுகல் கட்டுப்படுத்தப்பட்டால் நாட்டுக்கு நல்லது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது. எக்ஸ் கார்ப் நிறுவனம் (முன்னாள் டிவிட்டர் நிறுவனம்), மத்திய அரசு பிறப்பித்த தடை உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
இளைஞர்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை அணுகுவது தடைசெய்யப்பட்டால் அது தேசத்திற்கு நல்லது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் கூறியது. மேலும் அவர்கள் சமூக வலைதளத்தை அணுக அனுமதிக்கப்பட வேண்டிய நுழைவு வயது 21 அல்லது 18-ஆக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. அதாவது முதல் வாக்குரிமை பெறும்போது அவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என நீதிபதி பி வசந்த குமார் தெரிவித்துள்ளார்.
முன்னாள் டிவிட்டர் நிறுவனமான எக்ஸ் கார்ப் நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மீண்டும் தொடங்கிய நீதிபதிகள் ஜி நரேந்தர் மற்றும் விஜயகுமார் ஏ பாட்டீல் அடங்கிய உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வு, பள்ளி செல்லும் குழந்தைகள் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர். சமூக வலைதளங்களுக்கு வயது வரம்பு விதிக்கப்பட்டால் அது நாட்டுக்கு நல்லது என குறிப்பிட்டுள்ளனர்.
மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டு இடைக்கால மேல்முறையீடுகளில் (IAs) இன்று உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று நீதிபதிகளின் அமர்வு குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் பிரிவு 69A (1) மற்றும் (2) ஆகியவற்றை மீறுகிறதா என்பதுதான் ஆராயப்பட வேண்டிய ஒரே அம்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்த விதிகள் மீறப்பட்டால், மேல்முறையீடு செய்தவர் (X Corp) தடை உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும்," என்று நீதிபதிகள் ஜி நரேந்தர் மற்றும் விஜயகுமார் ஏ பாட்டீல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவை தளமாகக் கொண்ட மல்டி-பிளாக்கிங் தளத்தின் ஆலோசகர், மேல்முறையீட்டில் உள்ள சவால், போஸ்ட்டுகள் மற்றும் கணக்குகளைத் தடுப்பது குறித்த சட்டத்தின் விளக்கத்திற்கு எதிரான தனி நீதிபதியின் கருத்துக்கு மட்டுமே உட்பட்டது என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆகஸ்ட் 10 ஆம் தேதி, தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே தலைமையிலான அமர்வு, எக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்குள் ரூ. 25 லட்சம் டெபாசிட் செய்யுமாறு நிபந்தனையுடன் இடைக்காலத் தடை விதித்தது.
மேல்முறையீட்டு மனுவில், X Corp தனி நீதிபதி அமர்வு தவறுதலாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69A(1)ன்படி, எழுத்துப்பூர்வமாக காரணங்களைக் கொண்டிருக்க தடை உத்தரவுகள் தேவையில்லை என்று கூறியுள்ளது. மேலும், இணையதளத் தடை விதிகளின் விதி 14-ஐ மத்திய அரசு கடைபிடிக்கத் தவறியதை தனி நீதிபதி அமர்வு புறக்கணித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிவு 226 இன் கீழ் ஒரு மனுவைக் கொண்டுவருவதற்கு மேல்முறையீட்டாளர் இடம் பெற்றிருந்தாலும், மேல்முறையீட்டாளர் அரசியலமைப்பின் 21 வது பிரிவின் பாதுகாப்பைக் கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவில் காரணங்களை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஐடி சட்டத்தின் பிரிவு 69(1) இன் எளிய மொழியைப் பின்பற்றத் தவறியதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என எக்ஸ் கார்ப் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.