தமிழ்நாடு:



  • சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்குமார் விவாகரத்து கோரி மனு: மனைவியுடன் கருத்து வேறுபாடு

  • தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

  • சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல்

  • ‘அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தயார் செய்துள்ளது’ – கே.சி. பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு

  • பிரபல யூடுபர் TTF வாசனுக்கு அக்டோபர் 3ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

  • விழுப்புரம் மாவட்டத்தில் 38 இடங்களில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் பழனி ஆய்வு

  • மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  • வேலூர் அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு கணவன் மனைவி உயிரிழப்பு. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்தியா: 



  • புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்தான் என்ற விதியால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னரே அமலாக வாய்ப்பு

  • காவிரி பங்கீடு விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - மத்திய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தல்

  • இந்திய எல்லையில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் - துப்பாக்கியால் சுட்டு மீனவர்கள் விரட்டியடிப்பு

  • ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுபாதை நிறைவு; எல்1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்க தொடங்கியது - இஸ்ரோ தகவல்

  • காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் மோதல்; கனடா தூதரக அதிகாரி நாட்டைவிட்டு 5 நாட்களில் வெளியேற இந்தியா உத்தரவு

  • சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது நிர்ணயம் செய்யுங்கள் - மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி தருமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

  • காவிரி நதி நீர் விவகாரம்: கர்நாடக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் சிவக்குமார் டெல்லியில் ஆலோசனை - பிரதமர் மோடியை சந்திக்க முடிவு


உலகம்: 



  • உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் சப்ளை செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.

  • ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  • யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.

  • உக்ரைன் நாட்டிற்கு சுமார் 200 கோடியை கனடா வழங்கியுள்ளது.

  • தைவானில் நேற்று ரிக்டர் அளவில் 6.1 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. 


விளையாட்டு:



  • 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கால்பந்து அணி, சீன கால்பந்து அணியிடம் 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.

  • ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியா அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  • ’நாளை உங்க வீட்டு பெண்ணுக்கு இது நடக்கலாம்’... ஆபாசமான போலி வீடியோவிற்கு அன்ஷூ மாலிக் விளக்கம்!

  • இங்கிலாந்து-அயர்லாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி லீட்சில் இன்று நடக்கிறது.