'கேஜிஎஃப் - 2' படத்தின் இசை தொடர்பான பதிப்புரிமை மீறல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சுப்ரியா ஷிரினேட் ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


கேஜிஎப் ம்யூசிக்கில் ராகுல் காந்தி


யாஷ் நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் இசை உரிமையாளரான எம்ஆர்டி மியூசிக் தாக்கல் செய்த மனுவில், தலைமை நீதிபதி பிரசன்னா பி.வரலே மற்றும் நீதிபதி அசோக் எஸ்.கினகி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது. சமூக ஊடக தளங்களில் பாரத் ஜோடோ யாத்ராவின் (இந்திய ஒருமைப்பாடு யாத்திரை) விளம்பரப் படத்தின் பாடல்களை நீக்குவதற்கான உறுதிமொழியை மீறியதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் உத்தரவிடப்பட்டது. தனது பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, ராகுல் காந்தி அக்டோபரில் கர்நாடகாவில் மூன்று வாரங்கள் பயணம் செய்தார். பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். அதில் கேஜிஎப் திரைப்படத்தின் இசை இடம்பெற்றிருந்ததாக பதிப்புரிமை வைத்துள்ளா எம்ஆர்டி மியூசிக் வழக்கு தொடர்ந்தது.



நீக்குவதாக உறுதியளித்த காங்கிரஸ்


நவம்பர் 8 ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, நவம்பர் 9 ஆம் தேதிக்குள் அதன் சமூக ஊடகங்களில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட விஷயங்களை அகற்றுவோம் என்று நீதிமன்றத்தில் உறுதியளித்தார், மேலும் "எந்த நோக்கமும் இல்லை. எதிர்காலத்திலும் அப்படித்தான்" என்றார். நவம்பர் 8 அன்று, உயர் நீதிமன்றத்தின் மற்றொரு டிவிஷன் பெஞ்ச், காங்கிரஸ் கட்சியின் ஹேண்டில்களை தடுக்க சமூக ஊடகத் தளங்களைத் தடுக்கும் மற்றொரு நீதிமன்றத்தின் உத்தரவையும் பிறப்பித்தது.


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: தயாரா மக்களே... இன்று முதல் தமிழகத்தில் கனமழை இருக்கு - வானிலை ஆய்வு மையம்..!


இன்னும் நீக்கவில்லை என்று புகார்


அந்த பெஞ்ச், பதிப்புரிமை பெற்ற உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறிய மின்னணு தணிக்கையையும் ரத்து செய்தது. காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக கணக்குகளில் எங்கள் பதிப்புரிமை பாடல் கொண்ட வீடியோக்கள் இன்னமும் நீக்கப்படாமல் உள்ளது என்று MRT சுட்டிக்காட்டியது. இதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்ட தலைவர்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை என்று கூறி, தற்போதைய அவமதிப்பு புகாரை அது தாக்கல் செய்தது.



நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம்


ஒப்பந்தம் செய்யப்பட்ட போதிலும், பதிப்புரிமை பெற்ற பாடல்கள் நவம்பர் 20 அன்று காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் காணப்பட்டன என்று மனுதாரர் குற்றம் சாட்டினார். பாடல்கள் அடங்கிய இந்த கிளிப்களை அதன் சமூக ஊடக தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்ய காங்கிரஸ் கட்சி மக்களை அனுமதிப்பதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், "இந்த உயர் நீதிமன்றம் நவம்பர் 8 தேதியிட்ட உத்தரவை மதிக்காமல் மீறிய குற்றத்திற்காக தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்கினால் மகிழ்வோம் என்று மரியாதையுடன் வேண்டிக்கொள்கிறேன்", என்று கூறினார். இது தொடர்பாக நீதிமன்றம் காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மேலும் இந்த வழக்கு ஜனவரி 12, 2023 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.