கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் பல பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 17 முதல் பள்ளிகள் காலை 6.30 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெப்ப அலை காரணமாக கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் காலை 6.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் வெப்பம் கடுமையாக அதிகரித்து வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் ஏப்ரல் 14 தொடங்கி அடுத்த 5 நாட்களில் வெப்பம் நிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்கம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரபிரதேச கடலோர பகுதிகள், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பான அளவை விட 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்திருந்தது. 13-17 ஆம் தேதிகளில் மேற்கு வங்காளத்தின் ஒரு சில பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் வெப்ப அலை வீசும்" என்றும் எச்சரித்தது. ஆனால் 15 ஆம் தேதி கடந்தும் வெப்பம் குறைந்தபாடில்லை என்பதால் ஒடிசா மாநில அரசு பள்ளி, கல்லூரி நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றும்(ஏப்ரல் 16), நாளையும்(ஏப்ரல் 17) வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெயிலுக்கு இதமான எளிய பானம்:
நுங்கு உடலை குளிச்சிப்படுத்தவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது.வெயில் காலத்தில் திரும்பிய இடம் எல்லாம் நுங்கு கிடைக்கும்.அதை வைத்து சூப்பரான நுங்கு ஜுஸ் வீட்டிலேயே செய்யலாமே!
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
மிகுந்த எளிய முறையில் செய்யப்படும் இந்த நுங்கு ஜுஸ் வெயில் காலத்தில் அருந்த அமிர்தமாக இருக்கும்.
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
தேவையான பொருட்கள் : நுங்கு, தண்ணீர், பனங்கற்கண்டு.
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
நுங்கை வெளியில் எடுத்து தோள் உரித்து கொள்ள வேண்டும். அதை மிக்சியில் போட்டு அடித்து கொள்ள வேண்டும்.
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
பின், சிறிதளவு தண்ணீர் ஊற்றி மறுபடியும் அடித்து கொள்ள வேண்டும்.
வெயில் உங்களை வாட்டி வதைக்கிறதா? இருக்கவே இருக்கு குளிர்ச்சியுட்டும் குளு குளு நுங்கு ஜுஸ்!
பிறகு, தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அடித்தால் சுவையான நுங்கு ஜுஸ் தயார். இதனை உடனே பருகிவிடுவது நல்லது.