கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 124 பேர் கொண்ட பட்டியலை முதலில் வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.


கர்நாடக சட்டபேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. விரைவில் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மே மாதம் தேர்தல் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. ஒருவர் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.  இ


ன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அனைத்து கட்சி தரப்பில் தேர்தலை சந்திக்க எல்லா ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். அதனால் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மிகவும் தீவிரமாக தேர்தல் வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேலை இழந்த ஆட்சியை எப்படியாவது மீண்டும் கைபற்ற வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகள் மட்டுமல்லாமல் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம் ஆத்மியும் களத்தில் இறங்குகிறது.  


பாஜகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. டெல்லி, பஞ்சாப், குஜராத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி கர்நாடகாவில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார்.


தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை ஒருபுறம் இருக்க பிரதமர் மோடி இன்று பெங்களூருக்கு வருகை தருகிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6 முறை கர்நாடகாவிற்கு பல்வேறு திட்டங்கள் தொடங்குவதற்காக வந்துள்ளார். இன்று 7 வது முறையாக வருகிறார். இன்று 13.71 கிமீ தொலைவு மெட்ரோ ரயில் பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். 


காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீப காலத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார். தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 செப்டம்பர் மாதம் முதல் வழங்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகா மாநிலத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள அனைவரும் கர்நாடகாவிற்கு படை எடுக்கத்தொடங்கியுள்ளனர்.