Odisha Train Accident : ஒடிஷா ரயில் விபத்தில் இறந்த உடல்களை தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள பிணவறையில் ஒரு நபர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஒடிஷா ரயில் விபத்து


ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.


அப்போது, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதே நேரத்தில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஹவுரா அதிவிரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயில் ஒன்று  மோதியதில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்தது.


அதேவேலையில்  ரயில் விபத்தில் 288 பேர் இறந்ததாக ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பிணவறைகள், பல்வேறு மாவட்ட கலெக்டர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த பிறகு, பாலசோரில் ஏற்பட்ட உயிரிழப்பு 288 என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், இதுவரை 205 உடல்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிணவறையில் இருந்து எழுந்த நபர்


ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு மிக அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தான் உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை அடுத்து, பிணவறையில் வைக்கப்பட்ட உடல்கள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட குடும்பத்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேற்று அறைக்குள் குவிந்திருந்த சிதைந்த உடல்களை அகற்ற மீட்புப் பணியாளர்கள் அறைக்குள் நுழைந்தபோது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 


அதன்படி, சடல்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் அடைக்கப்பட்டிருந்துள்ளார். உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்கள் மட்டுமே வைக்கப்பட்ட அறையில், அங்கு ஒருவர் உயிர்பிழைத்து எழுந்தது  அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவர் மெல்ல விழித்து நான் உயிருடன் இருக்கிறேன். சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.


உடனே இவரை மீட்புப்படையினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  ஆனால் அவரது இரண்டு கால்களையும் விபத்தில் இழந்துள்ளார். தற்போது, அவர் ஆபத்தான நிலையில் மேதினிபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலும்பியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


Union Cabinet: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ. 89 ஆயிரம் கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்