விபத்து:


கேரளா மாநிலம் அமைந்துள்ளது கண்ணூர் இங்கு வசித்து வருபவர் முனீர். இவர் மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று தலாசேரியில் இருந்து வடகரா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஜீஜித் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கு வயது 44.


நேற்று மாலை முனீர் அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜீஜித் ஓட்டிச் சென்ற அந்த பேருந்து அவர் மீது மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலே காயம் அடைந்தார். முனீர் காயமடைந்தைத கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஓடி வந்தனர்.


ரயிலில் அடிபட்டு உயிரிழந்த ஓட்டுனர்:


இதனால், மக்கள் கூடுவதை கண்ட ஜீஜித் கடுமையாக அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். அப்போது, அவர் அங்கிருந்த ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது, அந்த தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளது. அதை அவர் கவனிக்கவில்லை. இதனால், ரயில் அவர் மீது மோதியது.


ரயில் மோதியதில் ஜீஜித் தூக்கி வீசப்பட்டார். தூக்கி வீசப்பட்ட ஜீஜித் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓட முயற்சித்தபோது ஓட்டுனர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


போலீஸ் விசாரணை


ஜீஜித் ஓட்டிய பேருந்து மோதியதில் காயம் அடைந்த முனீரை அக்கம்பக்கத்தினர் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, போலீசார் உயிரிழந்த ஜீஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜீஜித் பேருந்து ஓட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.


விபத்தின் காரணமாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும்  கிளீனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க: Diwali Wishes: நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம்..பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து


மேலும் படிக்க: Diwali 2023: பிறந்தது தீபாவளி! கிடுகிடுவென உயர்ந்த பூக்கள் விலை - பூஜை பொருட்கள் வாங்க அலைமோதும் மக்கள்!