ராகுல் காந்தியில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். 


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் யாத்ராவை கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். இன்று தொடங்கிய பயணம் இதுவரை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களை கடந்து டெல்லியில் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. 


ஏறக்குறைய 3,000 கி.மீ தூரத்தை கடந்து 12 மாநிலங்களில் பயணம் முடிந்து இன்னும் 5,70 கி.மீ மிச்சம் இருக்கிறது. இந்த பயணமும் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் முடிவடைய இருக்கிறது. 


இந்தநிலையில், கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார அமைச்சரின் அறிவுரைக்கு மத்தியில் ராகுல் காந்தி டெல்லியில் யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 






இந்தநிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனும் டெல்லியில் இன்று யாத்திரையில் கலந்துகொண்டார். ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபிந்தர் சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரந்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் அணிவகுத்து சென்றனர். 


காங்கிரஸ் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ’பாரத் ஜோடா யாத்திரை’ (ஒற்றுமைப் பயணம்) எனும் பேரில், ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 60  நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா வழியாக இன்று தலைநகர் டெல்லியை அடைந்துள்ளது. 


இந்த யாத்திரையில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளித்து வருகின்றனர். இதில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பங்கேற்றார்.  ராகுல் காந்தி தலைமையிலான பாத யாத்திரை தென்கிழக்கு டெல்லியில் உள்ள பதர்பூர் எல்லையில் இருந்து இன்று காலை 6:30 மணிக்கு டெல்லிக்குள் நுழைந்த யாத்திரை ஆஷ்ரம் சௌக் வழியாக செங்கோட்டையில் நிறைவடைய இருக்கிறது.