பெண் தொட்டிலை ஆட்டிய காலம் மாறி உலகை ஆளும் காலமும் வந்து இப்போது விண்வெளியிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவைச் சேர்ந்த முதல் விண்வெளி வீராங்கணை கல்பனா சாவ்லா. கடந்த 2003 ஆம் ஆண்டு அவர் கொலம்பியா விண்கல ஓடத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் சில..
1. ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் கடந்த 1962 ஆன் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி பிறந்தார். ஆரம்பகால கல்வியை தனது சொந்த கிராமத்திலேயே பயின்ற அவர் சண்டிகரில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கள் இன்ஜினியரிங் பயின்றார்.2. 1982 ஆம் ஆண்டு அவர் அமெரிக்கா சென்றார்.3. அங்கே டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1984 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் ஆஃப் சயின்ஸ் முதுநிலை பட்டம் வென்றார். 1988ல் ஏரோஸ்பேஸ் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.4. பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் பணியில் இணைந்தார்.5. 1994 டிசம்பரில் நாசாவின் அஸ்ட்ரானட் கேன்டிடேட்டாக தேர்வானார்.
கல்பனா சாவ்லாதான் விண்வெளிக்குச் சென்ற இந்தியாவில் பிறந்த முதல் வீராங்கனை. அவருக்கு பிறகு இந்தியாவில் பிறந்த சிரிஷா பாண்ட்லா தான் தற்போது விண்வெளி பயணம் மேற்கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் பிறந்து விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் சிரிஷா பாண்ட்லா. ஸ்ரீஷா, நம்
அண்டை மாநிலமான ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் பிறந்தவர். இவருக்கு 5 வயதாக இருக்கும்போது தந்தை டாக்டர் பாண்ட்லா முரளிதரும், தாய் அனுராதாவும் அமெரிக்கா ஹூஸ்டனுக்கு இடம்பெயர்ந்தனர்.